கிரிக்கெட்

மகனுக்கு முடிவெட்டிய சச்சின் தெண்டுல்கர்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் + "||" + Sachin Tendulkar Hair cut for son: Video goes viral on social networks

மகனுக்கு முடிவெட்டிய சச்சின் தெண்டுல்கர்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

மகனுக்கு முடிவெட்டிய சச்சின் தெண்டுல்கர்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
சச்சின் தெண்டுல்கர் தனது மகனுக்கு முடிவெட்டும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

* ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கியுள்ள இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது மகன் அர்ஜூனுக்கு புதிய ஸ்டைலில் முடி வெட்டியுள்ளார். அந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

* சூதாட்ட தரகர் அணுகிய விஷயத்தை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவிக்காமல் மறைத்த குற்றத்துக்காக 3 ஆண்டு தடை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்துள்ளார். அவரது அப்பீல் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தனிநபர் கமிட்டி விசாரிக்கும்.

* இந்த ஆண்டு நடக்க இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கொரோனா அபாயத்தால் அடுத்த ஆண்டு ஜூலை- ஆகஸ்டுக்கு தள்ளிவைக்கப்பட்டு விட்டது. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான காலக்கட்டத்தின் கடைசி நாள் 2021-ம் ஆண்டு ஜூன் 29-ந்தேதி ஆகும். அதற்குள் எல்லா தகுதி சுற்று போட்டிகளை நடத்தி முடித்தாக வேண்டும். ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிகளுக்கான தேதியை இறுதி செய்யுமாறு சர்வதேச விளையாட்டு சம்மேளனங்களை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.