கிரிக்கெட்

பேட்டிங் பிரச்சினையை தீர்க்க ரசிகர் கூறிய ஆலோசனை... இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த யுவராஜ் சிங்! + "||" + Wait For Yuvi Jr: Yuvraj Singh Shares Fans Amusing Suggestion To Solve Batting Problems

பேட்டிங் பிரச்சினையை தீர்க்க ரசிகர் கூறிய ஆலோசனை... இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த யுவராஜ் சிங்!

பேட்டிங் பிரச்சினையை தீர்க்க ரசிகர் கூறிய ஆலோசனை... இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த யுவராஜ் சிங்!
பேட்டிங் பிரச்சினையை தீர்க்க ரசிகர் ஒருவர் 3 ஆலோசனைகளை கூறினார்,அதனை இன்ஸ்டாகிராமில் யுவராஜ் சிங்! பகிர்ந்து உள்ளார்.
மும்பை

17 ஆண்டுகளாக இந்தியாவுக்கு விளையாடிய யுவராஜ், கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

சமீபத்தில் யுவராஜ் சிங், “கீப் இட் அப்” சேலஞ்ச் செய்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சேலஞ்ச் செய்ய சச்சின் தெண்டுல்கர், ஹர்பஜன் சிங் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரையும் இதில் பங்கேற்குமாறு பரிந்துரைத்தார்.

அப்போதிலிருந்து பல கிரிக்கெட் வீரர்கள் சவாலை ஏற்றுக்கொண்டு, தங்கள் தனித்துவமான மாற்றத்தை அதில் சேர்த்து வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் நிறுத்தப்பட்டுள்ளதால், கிரிக்கெட் வீரர்கள் தங்கள் ரசிகர்களை மகிழ்விக்க வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர்.

யுவராஜ் சிங் மற்ற கிரிக்கெட் வீரர்களைப் போல் லாக்டவுன் சமயத்தில் தன்னுடைய நேரத்தை வீட்டில் செலவழித்து வருகிறார். இந்த நாட்களில் அவர் சமூக ஊடக பக்கங்களில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். அவருடைய சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில், பேட்டிங் பிரச்சினையை தீர்க்க ரசிகர் கூறிய வேடிக்கையான ஆலோசனையைப் பகிர்ந்துகொண்டார். 

யுவராஜ் சிங் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் கதைகளில், ரசிகர் ஒருவர் தன்னுடைய கைகளில் போஸ்டர் ஒன்றை வைத்துள்ளார், அதில் பேட்டிங் பிரச்சினைகளை தீர்க்க மூன்று வழிகளைக் கூறியுள்ளார். “யுவிக்கு கால் செய்யவும், வாட்ஸ் அப் செய்யவும் மற்றும் யுவியின் ஜூனியருக்கு காத்திருங்கள்,” என்று அந்த ரசிகர் போஸ்டரில் எழுதியிருந்தார். இந்தப் புகைப்படத்தை யுவராஜ் சிங் சிரிக்கும் எமோஜியுடன் பகிர்ந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமுக்கு பாராட்டு
இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடிய வீரர் பாகிஸ்தான் வபாபர் அசாமுக்கு பாராட்டு கிடைத்துள்ளது.
2. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.
3. அக்தர் பந்தை எதிர்கொள்ள தெண்டுல்கர் பயப்படுவார், ஆனால் அவர் அதை ஏற்க மாட்டார் - அப்ரிடி
சோயிப் அக்தர் பந்தை எதிர்கொள்ள சச்சின் தெண்டுல்கர் பயப்படுவார், ஆனால் அவர் அதை ஏற்க மாட்டார் என்று ஷாகித் அப்ரிடி கூறி உள்ளார்.
4. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் என் கழுத்தில் கத்தியை வைத்தார் முன்னாள் பயிற்சியாளர் அதிர்ச்சி தகவல்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் என் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார் என பாகிஸ்தானின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்து உள்ளார்.
5. தோனி இல்லை என்றால் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை அன்றே முடிந்திருக்கும்- கவுதம் காம்பீர் பரபரப்பு தகவல்
தோனி மட்டும் அன்று கோலியை பாதுகாக்காமல் இருந்திருந்தால், கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்திருக்கும் என கவுதம் காம்பீர் தெரிவித்து உள்ளார்.