கிரிக்கெட்

போதை பொருள் வைத்திருந்ததாக இலங்கை கிரிக்கெட் வீரர் கைது + "||" + Sri Lankan pacer Shehan Madushanka detained on a charge of possessing heroin

போதை பொருள் வைத்திருந்ததாக இலங்கை கிரிக்கெட் வீரர் கைது

போதை பொருள் வைத்திருந்ததாக இலங்கை கிரிக்கெட் வீரர் கைது
சட்டவிரோதமாகப் போதைப் பொருள்களை வைத்திருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் சிநேகன் மதுசங்காவை போலீசார் கைது செய்தனர்.
கொழும்பு,

இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பன்னாலா பகுதியில் தன் நண்பருடன் காரில் சென்றுகொண்டிருந்த மதுசங்காவை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, காருக்குள் போதைப்பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காருக்குள் வைக்கப்பட்டிருந்த 2 கிராம் ஹெராயினைக் போலீசார் பறிமுதல் செய்தனர்.


இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மதுசங்காவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். மதுசங்காவுக்கு இரு வாரம் நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனவரி 2018-ல், வேகப்பந்துவீச்சாளர் மதுசங்கா (வயது 25) வங்கதேசத்துக்கு எதிராக அறிமுகமானார். முதல் ஒருநாள் ஆட்டத்திலேயே ஹாட்ரிக் எடுத்து சாதனை படைத்தார். மதுசங்கா, இதுவரை 1 ஒருநாள், 2 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.