கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிராக பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற்றால் கடுமையான போட்டி நிலவும் - மிட்செல் ஸ்டார்க் + "||" + Mitchell Starc backs plan for pink-ball Tests against India

இந்தியாவுக்கு எதிராக பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற்றால் கடுமையான போட்டி நிலவும் - மிட்செல் ஸ்டார்க்

இந்தியாவுக்கு எதிராக பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற்றால் கடுமையான போட்டி நிலவும் - மிட்செல் ஸ்டார்க்
இந்தியாவுக்கு எதிராக பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற்றால் கடுமையான போட்டி நிலவும் என ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கூறியுள்ளார்.
சிட்னி,

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்ய இருந்தால் பின்பற்றவேண்டிய நடைமுறைகளும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த வருட இறுதியில் ஆஸ்திரேலியாவில் விளையாட்டுப் போட்டிகள் மீண்டும் தொடங்கும் என விளையாட்டுத்துறை மந்திரி ரிச்சர்ட் கோல்பெக் பேசியது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.


இத்தொடர் குறித்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கூறியதாவது:

இந்தியாவுக்கு எதிராக பகலிரவு டெஸ்ட் ஆட்டம் நடைபெற்றால் அது அருமையாக இருக்கும். ரசிகர்கள் இதை மிகவும் விரும்புவார்கள். பந்துக்கும் பேட்டுக்கும் இடையே கடுமையான போட்டி நடக்கும். ஏற்கெனவே இந்திய அணி, கொல்கத்தாவில் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடியுள்ளதால் அவர்களுக்கும் இது புதிதாக இருக்காது.

ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதால் பகலிரவு ஆட்டம் எங்களுக்குச் சாதகமாக இருக்கும். அதேபோல இந்தியாவில் நாங்கள் விளையாடினால் அவர்களுக்குப் பகலிரவு ஆட்டம் சாதகமாக இருக்கும். பகலிரவு டெஸ்டில் விளையாட இந்திய அணியும் ஆர்வமாக இருப்பதால் அது ஆட்டத்துக்கு பஞ்சம் இருக்காது என்று கூறியுள்ளார்.