கிரிக்கெட்

திருமணநாளையொட்டி மனைவிக்காக மாம்பழ குல்பியைத் தயாரித்த சச்சின் தெண்டுல்கர்! + "||" + Surprise for our Wedding Anniversary sachintendulkar

திருமணநாளையொட்டி மனைவிக்காக மாம்பழ குல்பியைத் தயாரித்த சச்சின் தெண்டுல்கர்!

திருமணநாளையொட்டி மனைவிக்காக மாம்பழ குல்பியைத் தயாரித்த சச்சின் தெண்டுல்கர்!
திருமணநாளையொட்டி மனைவிக்காக மாம்பழ குல்பியைத் தயாரித்துள்ளதாக சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
மும்பை,

ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கியுள்ள இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் அவரது திருமணநாளையொட்டி மனைவிக்காக  மாம்பழ குல்பியை தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது:-


இன்று எங்களுடைய 25-வது திருமண நாள். இதனால் வீட்டில் உள்ள அனைவரையும் ஆச்சர்யப்படுத்துவதற்காக இந்த மாம்பழ குல்பியைத் தயாரித்துள்ளேன். தன்னுடைய அம்மாவின் ஆலோசனையின் பேரில் இதைச் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

1990-ல் அஞ்சலியை முதல்முதலாகச் சந்தித்த சச்சின், 5 வருடங்கள் காதலித்து, 1995-ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சாரா என்கிற மகளும் அர்ஜூன் என்கிற மகனும் உள்ளார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன் சச்சின் தெண்டுல்கர் தனது மகன் அர்ஜூனுக்கு புதிய ஸ்டைலில் முடி வெட்டினார். அந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.