கிரிக்கெட்

போட்டியில் எனக்கு எதிரி: வெளியில் நல்ல நண்பர் - விராட் கோலி குறித்து சோயப் அக்தர் பதில் + "||" + Wish Virat Kohli Had Played Against Wasim Akram And Waqar Younis": Shoaib Akhtar

போட்டியில் எனக்கு எதிரி: வெளியில் நல்ல நண்பர் - விராட் கோலி குறித்து சோயப் அக்தர் பதில்

போட்டியில் எனக்கு எதிரி: வெளியில் நல்ல நண்பர் - விராட் கோலி குறித்து சோயப் அக்தர் பதில்
போட்டியில் எனக்கு எதிரி, வெளியில் நல்ல நண்பர் என விராட் கோலி குறித்து சோயப் அக்தர் கூறியுள்ளார்.
மும்பை,

கொரோனோ லாக்டவுன் காரணமாக உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான வீரர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

போட்டிகள் இல்லாததால் ரசிகர்களை குஷிபடுத்த வீரர்கள் சமூக வலைதளங்களில் தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.


அந்தவகையில், முன்னாள் பாகிஸ்தான் வீரரும், ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படுபவருமான சோயப் அக்தர் ஈ.எஸ்.பி.என் கிரிக்கெட் செய்தி நிறுவனத்திற்கு அளித்த போட்டியில் விராட் கோலி குறித்து தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

விராட் கோலியும், நானும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் இருவரும் பஞ்சாபி. எங்கள் இருவருக்கும் ஒத்த இயல்பு இருக்கிறது. எனவே நாங்கள் களத்திற்கு வெளியில் சந்தித்தால் சிறந்த நண்பர்களாக இருப்போம். அதே வேளையில் இருவரும் போட்டியில் சந்தித்தால் அவருக்கு மிகச்சிறந்த எதிரியாக இருந்திருப்பேன். அவருக்குப் பெரிய மனசு போல் தெரிகிறது, அவர் எனக்கு மிகவும் இளையவர் என்றாலும், நான் அவரை மிகவும் மதிக்கிறேன் என்றார்.

விராட் கோலி - அக்தர் இருவரும் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே நேருக்கு நேர் விளையாடியுள்ளனர். 2010-ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பையில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இருப்பினும் அக்தர் விராட் கோலிக்கு பந்துவீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.