கிரிக்கெட்

வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கினர் + "||" + The West Indies team started training

வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கினர்

வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கினர்
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக, வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கினர்.
கிங்ஸ்டன், 

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட அடுத்த மாதம் (ஜூன்) 8-ந்தேதி இங்கிலாந்துக்கு புறப்பட்டு செல்ல திட்டமிட்டுள்ளது. இதையொட்டி வெஸ்ட்இண்டீஸ் டெஸ்ட் அணி வீரர்கள் கேப்டன் ஜாசன் ஹோல்டர் தலைமையில் கிங்ஸ்டனில் உள்ள ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் பயிற்சியை தொடங்கினார்கள். பிராத்வெய்ட், ஷாய் ஹோப், கெமார்ரோச் உள்ளிட்ட வீரர்கள் மைதானத்தில் சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பயிற்சியில் ஈடுபட்டனர். பூட்டிய ஸ்டேடியத்தில் நடந்த இந்த பயிற்சியை காண ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.