கிரிக்கெட்

ஓய்வுபெறப் போகிறேன் என அறிவிக்கும் நபர் அல்ல டோனி - பயிற்சியாளர் கேஷவ் பானர்ஜி + "||" + MS Dhoni's childhood coach clears air on MSD's retirement, says 'he will inform BCCI and call press conference'

ஓய்வுபெறப் போகிறேன் என அறிவிக்கும் நபர் அல்ல டோனி - பயிற்சியாளர் கேஷவ் பானர்ஜி

ஓய்வுபெறப் போகிறேன் என அறிவிக்கும் நபர் அல்ல டோனி  - பயிற்சியாளர் கேஷவ் பானர்ஜி
ஓய்வுபெறப் போகிறேன் என அறிவிக்கும் நபர் அல்ல டோனி என டோனியின் சிறுவயது பயிற்சியாளரான பயிற்சியாளர் கேஷவ் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மும்பை,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்து டி20 உலகக் கோப்பை போட்டியும் ஒத்திவைக்கப்பட இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது.


இதனால் டோனியின் ரசிகர்கள் மிகவும் கவலையில் இருக்கின்றனர். எங்கே டோனி சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவாரோ என்பதுதான் அது. மேலும் பல வீரர்கள் டோனி மீண்டும் அணிக்குத் திரும்புவது குறித்து தங்களது கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்துள்ள டோனியின் சிறுவயது பயிற்சியாளரான கேஷவ் பானர்ஜி எல்லோரையும் கூப்பிட்டு வைத்து நான் ஓய்வுபெறப் போகிறேன் என அறிவிக்கும் நபர் அல்ல  அவருக்கு எப்படி அதைத் தெரிவிப்பது எனத் தெரியும்.

அவர் விளையாடியது போதும் என நினைத்தால் முறைப்படி பிசிசிஐக்கு தகவல் தெரிவிப்பார், ஊடகங்களுக்குத் தெரிவிப்பார். அவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும்போதும்  இவ்வாறே செய்தார்.