கிரிக்கெட்

இரண்டு வருடத்திற்கான போட்டி அட்டவணையை வெளியிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி + "||" + Cricket Australia announce complete fixtures for 2020-21 home season; to host India, West Indies, Afghanistan, Zimbabwe and New Zealand

இரண்டு வருடத்திற்கான போட்டி அட்டவணையை வெளியிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

இரண்டு வருடத்திற்கான போட்டி அட்டவணையை வெளியிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
இரண்டு வருடத்திற்கான ஆடவர், மகளிர் அணிக்கான போட்டி அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெளியிட்டுள்ளது.
சிட்னி

கொரோனோ வைரஸ் பாதிப்பு ஆஸ்திரேலியாவில் கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஆடவர், மகளிர் அணிக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது.

ஆடவர் அணி ஆகஸ்ட் மாதம் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. முதல் ஒருநாள் போட்டி  - ஆகஸ்ட் 9-ம் தேதி, இரண்டாவது ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 12-ம் தேதி, மூன்றாவது ஒருநாள் போட்டி - ஆகஸ்ட் 15 ம் தேதி டவுன்ஸ்வில்லே-வில் நடைபெறவுள்ளது. முதல் இரண்டு போட்டிக்கு இன்னும் மைதானம் முடிவாகவில்லை.

இதனைத் தொடர்ந்து நவம்பர் 21 முதல் 25 வரை பெர்த் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

இதனைத் தொடர்ந்து இந்திய அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்துகிறது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணிக்கு எதிராக நான்கு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

ஆஸ்திரேலியா - இந்தியா நான்கு போட்டி டெஸ்ட்  தொடர்

1. முதல் போட்டி - டிசம்பர் 3-7 : பிரிஸ்பென்

2. இரண்டாவது போட்டி - டிசம்பர் 11-15 - அடிலெய்ட் (பகல் - இரவு டெஸ்ட்)

3. மூன்றாவது போட்டி - டிசம்பர் 26-30 : மெல்பேர்ன் (பாக்ஸிங் டே டெஸ்ட்)

4. நான்காவது போட்டி - ஜனவரி 3-7 : சிட்னி

ஆஸ்திரேலியா - இந்தியா மூன்று போட்டி ஒருநாள் தொடர்

1. ஜனவரி 12 -  பெர்த்

2. ஜனவரி 15 - மெல்பேர்ன்

3. ஜனவதி 17 - சிட்னி

இந்திய அணியுடனான போட்டியைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 2021 ம் ஆண்டு அக்டோபர் 4, 6, 9 ம் தேதிகளில் நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து இந்திய அணிக்கு எதிராக மூன்று 20  ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. 2021 அக்டோபர் மாதம் 11, 14, 17 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. நியூசிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது. 2022 ம் ஆண்டு ஜனவரி 26, 29, 31 ம் தேதிகளில் ஒருநாள் போட்டிகளும், பிப்ரவரி 2 சிட்னியில் டி-20 போட்டியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பாலியல் பலாத்கார மிரட்டல்! ஒவ்வொரு நொடியும் பயம்...பிரபல கிரிக்கெட் வீரர் மனைவியின் பரிதாப நிலை
பாலியல் பலாத்கார மிரட்டல்! ஒவ்வொரு நொடியும் பயம்... வாழ்த்து கூறிய பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
2. இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: இன்று நடக்கிறது
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, இன்று நடக்க உள்ளது.
3. ஐபிஎல் 2020 போட்டி அட்டவணை நாளை அறிவிக்கும் வாய்ப்பு...?
ஐபிஎல் போட்டி அட்டவணை இன்று மாலை அல்லது நாளை அறிவிக்கப்படும் என பிசிசிஐயின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
4. சென்னை அணி எனது குடும்பத்தைப் போன்றது; டோனி எனது மூத்த சகோதரர்- சுரேஷ் ரெய்னா உருக்கம்
சென்னை அணி எனது குடும்பத்தைப் போன்றது டோனி எனது மூத்த சகோதரர் விரைவில் சிஎஸ்கே அணிக்கு மீண்டும் திரும்புவேன் என சுரேஷ் ரெய்னா கூறினார்.
5. டோனி புதிய இந்தியாவின் அடையாளம் - பிரதமர் மோடி
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டோனியை வாழ்த்தி பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதி உள்ளார்.