ரோகித் சர்மாவுக்கு, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் லட்சுமண் புகழாரம் சூட்டியுள்ளார்.
மும்பை,
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, ‘ரோகித் சர்மா முதலாவது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்தே முன்னேற்றம் கண்டு வருகிறார். ஒவ்வொரு ஆட்டத்திலும் சாதிக்கும் போது அவரது நம்பிக்கையும் அதிகரிக்கிறது. ஒரு கேப்டனாக நெருக்கடியான சூழலில் பதற்றம் இன்றி திறம்பட சமாளிக்கிறார். இதே போல் பேட்ஸ்மேனாகவும் சிக்கலான கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இதனால் தான் அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக (இவரது தலைமையில் மும்பை அணி 4 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளது) திகழ்கிறார்’ என்றார்.
அரசின் தலைமை பொறுப்பு ஏற்று 20-வது ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று அடியெடுத்து வைக்கிறார். நிர்வாக திறமை, செயலாக்கம் உடைய சீர்திருத்தவாதியாக மோடி திகழ்கிறார் என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா புகழாரம் சூட்டியுள்ளார்.
சிரித்தமுகம்தான் எச்.வசந்தகுமார் வெற்றிக்கு காரணம் என்றும், முதல்முறையாக நம்மை அழவைத்துவிட்டு சென்றுவிட்டார் என்றும் அவருடைய நினைவேந்தல் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசினார்.