கிரிக்கெட்

யுவராஜ் சிங் மீது போலீஸ் நிலையத்தில் புகார் + "||" + Yuvraj Singh lodged a complaint at the police station

யுவராஜ் சிங் மீது போலீஸ் நிலையத்தில் புகார்

யுவராஜ் சிங் மீது போலீஸ் நிலையத்தில் புகார்
முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங், ரோகித் சர்மா ஆகியோர் சமீபத்தில் சமூக வலைதளம் மூலம் கலந்துரையாடினர். அப்போது இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் வெளியிட்ட ஒரு ‘டிக்டாக்’ பதிவை பற்றி பேசும் போது, இவருக்கு வேறு வேலையே இல்லை என்று கிண்டல் செய்த யுவராஜ்சிங், அநாகரீகமான வார்த்தை ஒன்றையும் பயன்படுத்தி இருந்தார். இந்த நிலையில் யுஸ்வேந்திர சாஹலின் சாதியை இழிவுப்படுத்தும் வகையில் யுவராஜ்சிங் பேசியதாக அரியானா மாநிலத்தில் உள்ள ஹன்சி போலீஸ் நிலையத்தில் வழக்கறிஞர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். யுவராஜ்சிங் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் கூறியுள்ளார்.

* ‘ஊரடங்கால் வீட்டிலேயே இருப்பது தொடக்கத்தில் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது எரிச்சலாக இருக்கிறது. களம் இறங்கி மீண்டும் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. சிறுவனை தத்தெடுத்த போலீஸ் நிலையம்
குடும்பத்தை பிரிந்து தனிமையில் தவித்த 14 வயது சிறுவனை போலீஸ் நிலையமே தத்தெடுத்திருக்கும் நெகிழ்ச்சி சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்திருக்கிறது.
2. நெல்லை அருகே வாலிபரை படுகொலை செய்து துண்டித்த தலையுடன் போலீஸ் நிலையம் வந்த அண்ணன்-தம்பி
நெல்லை அருகே வாலிபரை படுகொலை செய்த அண்ணன்-தம்பி துண்டிக்கப்பட்ட அவரது தலையுடன் வந்து போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
3. பெரிய காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்துக்கு ரூ.1 கோடியில் புதிய கட்டிடம் - போலீஸ் சூப்பிரண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்
பெரிய காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்துக்கு ரூ.1 கோடியில் புதிய கட்டிடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.