கிரிக்கெட்

ரோகித் சர்மாவை விட கோலியே சிறந்த பேட்ஸ்மேன் - பிராட் ஹாக் கணிப்பு + "||" + Kohli is better batsman than Rohit Sharma - Brad Hawk prediction

ரோகித் சர்மாவை விட கோலியே சிறந்த பேட்ஸ்மேன் - பிராட் ஹாக் கணிப்பு

ரோகித் சர்மாவை விட கோலியே சிறந்த பேட்ஸ்மேன் - பிராட் ஹாக் கணிப்பு
ரோகித் சர்மாவை விட கோலியே சிறந்த பேட்ஸ்மேன் என்று பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
சிட்னி, 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக், ‘யுடியூப் வீடியோ’ மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஒரு ரசிகர் குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் (ஒரு நாள் மற்றும் 20 ஓவர்) சிறந்த பேட்ஸ்மேன் இந்திய கேப்டன் விராட் கோலியா? துணை கேப்டன் ரோகித் சர்மாவா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் விராட் கோலி என்று பதில் அளித்தார்.

இது குறித்து ஹாக் கூறும் போது, ‘இந்திய அணி பெரிய இலக்குகளை துரத்தும் போது விராட் கோலி தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். பெரும்பாலும் இந்திய அணி 2-வது பேட்டிங் செய்யும் போது அவர் நிலைத்து நின்று அசத்துகிறார். அதே சமயம் அணியில் வெவ்வேறு விதமான பங்களிப்பை அளிக்கும் அவர்களை உண்மையிலேயே ஒப்பிட முடியாது. பீல்டிங் கட்டுப்பாடு உள்ள தொடக்கத்தில் புதிய பவுலர்களின் பந்து வீச்சில் அதிரடியாக ஆக்ரோஷம் காட்டுவது ரோகித் சர்மாவின் பணி. கடைசி வரை களத்தில் நிற்பதை உறுதி செய்யும் வகையில் இன்னிங்ஸ் முழுவதும் பேட்டிங் செய்ய வேண்டியது விராட் கோலியின் பொறுப்பு. ஒருவருக்கொருவர் தங்களது பணியை நிறைவு செய்யும் வகையில் ஆடுகிறார்கள்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த வரிசையிலும் விளையாட தயார் - ரோகித் சர்மா அறிவிப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எந்த வரிசையிலும் பேட்டிங் செய்ய தயாராக இருப்பதாக இந்திய வீரர் ரோகித் சர்மா கூறினார்.
2. இந்திய அணியில் ரோகித் சர்மாவை சேர்க்காதது ஆச்சரியம் அளிக்கிறது - ஷேவாக் வேதனை
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மாவை சேர்க்காதது ஆச்சரியம் அளிக்கிறது என ஷேவாக் தெரிவித்தார்.
3. காயம் சர்ச்சைக்கு மத்தியில் ஐ.பி.எல். போட்டியில் மீண்டும் களம் இறங்கினார், ரோகித் சர்மா
காயம் சர்ச்சைக்கு மத்தியில் ரோகித் சர்மா ஐ.பி.எல். போட்டியில் மீண்டும் களம் இறங்கினார்.
4. ரோகித் சர்மா உடல் தகுதியை நாளை ஆய்வு செய்கிறது பிசிசிஐ மருத்துவக் குழு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா காயம் காரணமாக கடந்த சில போட்டிகளாக விளையாடவில்லை
5. டோனியின் சாதனையை முறியடித்தார், கோலி
டோனியின் சாதனையை பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முறியடித்தார்.