கிரிக்கெட்

பறவையிடம் பரிவு காட்டிய டோனியின் மகள் + "||" + Dhoni's daughter, who sympathized with the bird

பறவையிடம் பரிவு காட்டிய டோனியின் மகள்

பறவையிடம் பரிவு காட்டிய டோனியின் மகள்
டோனியின் மகள் பறவையிடம் பரிவு காட்டிய சம்பவம் நிகழ்ந்தது.
ராஞ்சி, 

இந்திய கிரிக்கெட் வீரர் டோனியின் 5 வயது மகள் ஷிவாவுக்கு ‘இன்ஸ்டாகிராம்’ வலைதளத்தில் அதிகாரபூர்வ பக்கம் உள்ளது. அதை டோனியும், அவரது மனைவி சாக்‌ஷியும் நிர்வகிக்கிறார்கள். இந்த நிலையில் ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் ஷிவா வெளியிட்ட ஒரு ருசிகர பதிவு வருமாறு:-

மாலை வேளையில் எங்கள் வீட்டு புல்வெளியில் ஒரு பறவை நினைவின்றி மயங்கி கிடப்பதை பார்த்தேன். உடனே எனது அப்பா, அம்மாவை அழைத்தேன். என்னுடைய அப்பா டோனி அந்த பறவையை கையில் எடுத்து கொஞ்சம் தண்ணீர் கொடுத்தார். சிறிது நேரத்தில் அது கண் விழித்தது. இதனால் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தோம். பிறகு அதை அங்கிருந்த சில இலைகளின் மீது கூடு போன்று அமைத்து உட்கார வைத்தோம். அதன் பெயர் ‘காப்பர்ஸ்மித் பார்பெட்’ (செம்மார்புக் குக்குறுவான் குருவி) என்று எனது தந்தை கூறினார். ஆனால் அழகான அந்த சிறிய பறவை திடீரென பறந்து சென்று விட்டது. அது என்னுடன் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அது அதன் அம்மாவிடம் சென்று விட்டதாக என் அம்மா என்னிடம் கூறினார். அந்த பறவையை மீண்டும் பார்ப்பேன் என்று நம்புகிறேன். என்று அதில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. காருக்குள் கடிதம் வீசிய பழ வியாபாரியிடம் பரிவு காட்டிய முதல்-அமைச்சர் நேரில் அழைத்து பூங்கொத்து வழங்கினார்
காருக்குள் கடிதம் வீசிய பழ வியாபாரியிடம் பரிவு காட்டிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரை நேரில் அழைத்து பூங்கொத்து வழங்கினார்.