இந்திய கிரிக்கெட் அணியின் ஜிம்பாப்வே பயணம் ரத்து


இந்திய கிரிக்கெட் அணியின் ஜிம்பாப்வே பயணம் ரத்து
x
தினத்தந்தி 12 Jun 2020 10:30 PM GMT (Updated: 2020-06-13T00:29:37+05:30)

இந்திய கிரிக்கெட் அணி இந்த மாத இறுதியில் தொடங்கி அடுத்த மாதம் வரை இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட இருந்தது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி இந்த மாத இறுதியில் தொடங்கி அடுத்த மாதம் வரை இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட இருந்தது. கொரோனா அச்சத்தால் இந்த தொடர் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்தகட்டமாக இந்திய அணியின் ஜிம்பாப்வே பயணம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இந்திய அணி ஆகஸ்டு 22-ந்தேதியில் இருந்து ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட இருந்தது. இந்த தொடர் ரத்து செய்யப்பட்டு இருப்பதை இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா உறுதிப்படுத்தியுள்ளார். கொரோனா பாதிப்பு எதிரொலியாக கிட்டத்தட்ட 3 மாதங்களாக வீட்டிலேயே முடங்கியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் இன்னும் முறைப்படி பயிற்சியை கூட தொடங்கவில்லை. பாதுகாப்பான சூழல் உருவான பிறகே வீரர்களுக்கு பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்படும் என்று ஜெய் ஷா தெரிவித்தார். ஜூலை மாதம் வரை பயிற்சி முகாம் நடத்தப்பட வாய்ப்பில்லை எனறு தெரிகிறது.

Next Story