பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடிக்கு கொரோனா பாதிப்பு + "||" + Former captain of the Pakistan cricket team Shahid Afridi has tested positive for the coronavirus, he revealed on Saturday.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடிக்கு கொரோனா பாதிப்பு
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,52,944 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,28,525 ஆக உள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாகிஸ்தானிலும் பரவி வருகிறது.
அந்தவகையில், 1,32,405 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,551 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,472 ஆக உள்ளது. மேலும் ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாஹித் அப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில், வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லை. என் உடல் மோசமாக வலித்தது. நான் கொரோனா பரிசோதனை செய்தேன். துரதிர்ஷ்டவசமாக எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. விரைவில் மீண்டு வர பிரார்த்தனை தேவை. இன்ஷா அல்லாஹ் எனத் தெரிவித்துள்ளார்.
I’ve been feeling unwell since Thursday; my body had been aching badly. I’ve been tested and unfortunately I’m covid positive. Need prayers for a speedy recovery, InshaAllah #COVID19#pandemic#hopenotout#staysafe#stayhome
நடப்பு உலக கிரிக்கெட்டில் மிகவும் சாதுரியமான, புத்திசாலித்தனமான பவுலர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது ஜஸ்பிரீத் பும்ராதான் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்புயல் ஷோயப் அக்தர் புகழாரம் சூட்டியுள்ளார்.