கிரிக்கெட்

பழம்பெரும் கிரிக்கெட் வீரரும் வரலாற்றாசிரியருமான வசந்த் ராய்ஜி காலமானார்! + "||" + Vasant Raiji, India's Oldest First-Class Cricketer, Dies At 100

பழம்பெரும் கிரிக்கெட் வீரரும் வரலாற்றாசிரியருமான வசந்த் ராய்ஜி காலமானார்!

பழம்பெரும் கிரிக்கெட் வீரரும் வரலாற்றாசிரியருமான வசந்த் ராய்ஜி காலமானார்!
இந்திய அணியின் முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரரும், மும்பையை சேர்ந்த வரலாற்றாசிரியருமான வசந்த் ராய்ஜி காலமானார்.
மும்பை

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியவர் முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி மும்பையில் காலமானார்.

கிரிக்கெட்டர் மற்றும் வரலாற்றாசிரியர் என பன்முகம் கொண்டிருந்தவர் வசந்த் ரய்ஜி. இவர் தனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையை 1939ம் ஆண்டில் அப்போதைய கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா (CCI) அணிக்காக களமிறங்கி தொடங்கினார். இப்போட்டி நாக்பூரில் நடந்தது. 

தனது முதல் போட்டியிலேயெ ரன் ஏதும் இல்லாமல் டக் அவுட் ஆனார். அடுத்த இன்னிங்ஸில் ஒரு ரன் மட்டும் எடுத்தார். இருப்பினும் அது அவரது திறனை அதிகரித்துக் கொள்வதன் அவசியத்தை கற்றுத்தந்தது. பின்னர் அவர் பாம்பே (மும்பை) அணிக்காக ஆடினார். இவரது சமகால வீரர்களாக லாலா அமர்நாத், விஜய் மெர்சண்ட், சி.கே.நாயுடு மற்றும் விஜய் ஹசாரே இருந்தனர்.

தெற்கு மும்பையில் இந்திய அணி பாம்பே ஜிம்கானா மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது வசந்திற்கு வயது 13. அன்றிலிருந்து இன்றைய இந்திய அணியின் அனைத்து போட்டிகள் குறித்த தகவல்களையும் தொகுத்து வைத்திருந்தார். இந்த ஆண்டு ஜனவரியில் அவர் தனது 100வது பிறந்த நாளை கொண்டாடினார்.
கிரிக்கெட் ஜாம்வன்களான சச்சினும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாஹும் நேரில் சென்று அவரின் 100வது பிறந்த தினத்தில் கேக் ஊட்டினர். இதனை தனது டுவிட்டர் பக்கத்திலும் சச்சின் வீடியோவாக பதிவிட்டிருந்தார்.

பழங்கால கிரிக்கெட் வீரர்களான சி.கே.நாயுடு, விக்டர் டிரம்பர், எல்.பி.ஜெய் ஆகியோர் குறித்து நூல் எழுதி வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 14வது ஐபிஎல் போட்டி : வீரர்கள் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெறும்
14வது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
3. 37 பந்துகளில் சதம் அடித்த கேரள வீரர் முகமது அசாருதீனுக்கு சேவாக் பாராட்டு
அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் சதம் அடித்த கேரள வீரர் முகமது அசாருதீனுக்கு சேவாக் பாராட்டு தெரிவித்தார்.
4. ஆஸ்திரேலியா - இந்தியா : 3-வது டெஸ்ட் போட்டியும்... சுவராசியமான சம்பவங்களும்...
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி டிரா ஆனாலும் பரப்பரப்புக்கு பஞ்சமில்லாமல் பல சுவராசியமான சம்பவங்கள் நடந்து உள்ளன
5. அனுஷ்கா ஷர்மா, விராட் கோலி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது
அனுஷ்கா ஷர்மா, விராட் கோலி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.தாயும் சேயும் நலமாக இருப்பதாக விராட் கோலி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.