கிரிக்கெட்

‘கிரிக்கெட்டில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் டோனி’ - பிராவோ புகழாரம் + "||" + Tony is the biggest superstar in cricket Bravo fame

‘கிரிக்கெட்டில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் டோனி’ - பிராவோ புகழாரம்

‘கிரிக்கெட்டில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் டோனி’ - பிராவோ புகழாரம்
கிரிக்கெட்டில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் டோனி என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர் பிராவோ புகழாரம் சூட்டியுள்ளார்.
புதுடெல்லி,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரும், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான வெய்ன் பிராவோ ‘இன்ஸ்டாகிராம்’ உரையாடல் ஒன்றில் கூறியதாவது:-

கிரிக்கெட் உலகிலும், எங்கள் அணியிலும் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் டோனி. மிக எளிதாக சந்தித்து பேசக்கூடிய வீரர்களில் அவரும் ஒருவர். கிரிக்கெட் களத்திற்கு வெளியே மிக இயல்பாக வீடியோ கேம் விளையாடிக் கொண்டு இருப்பார். அவரது அறை கதவு எந்த நேரமும் திறந்தே இருக்கும். மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்கள் பற்றி நீங்கள் எப்போது பேசினாலும் சரி. அவர்களில் டோனி தான் மிகவும் தன்னடக்கம் கொண்டவராக இருப்பார். சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பு வாய்ந்த ஒரு அணி. எங்களுக்கு தான் விசுவாசமான ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.


சென்னை சூப்பர் கிங்சின் வெற்றிக்குரிய எல்லா பெருமையும் கேப்டன் டோனி, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரையே சாரும். அணி நிர்வாகிகளும் டோனி, பிளமிங் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே முக்கியமான முடிவுகள் எடுக்கும் போது வெளிப்புற தலையீடு எதுவும் இருக்காது. இருவரும் கிரிக்கெட்டை பற்றி நன்கு அறிந்தவர்கள். அணி வீரர்களும் டோனி மீது மிகுந்த பாசம் வைத்து உள்ளனர். அந்த சூழலே அருமையானது.

இவ்வாறு பிராவோ கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து மோதும் 20 ஓவர் கிரிக்கெட்; இன்று நடக்கிறது
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன்பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது.
2. நீதிபதிகள்-வக்கீல்கள் இடையே நடந்த நல்லுறவு கிரிக்கெட் போட்டியில் வக்கீல்கள் அணி கோப்பை வென்றது
நீதிபதிகள், வக்கீல்களுக்கு இடையே நடந்த ‘நல்லுறவு கிரிக்கெட்' போட்டியில் வக்கீல்கள் அணி வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது.
3. கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
4. முஷ்டாக் அலி கிரிக்கெட் சாம்பியன்: தமிழக அணி வீரர்கள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவார்கள்
தமிழக அணி வீரர்கள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவார்கள் கேப்டன் தினேஷ் கார்த்திக் நம்பிக்கை.
5. கோலியனூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி அமைச்சர் தொடங்கி வைத்தார்
கோலியனூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டியை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்.