கிரிக்கெட்

சர்ச்சை கருத்து: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டாக்டர் இடைநீக்கம் + "||" + Controversial opinion Chennai Super Kings team doctor suspended

சர்ச்சை கருத்து: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டாக்டர் இடைநீக்கம்

சர்ச்சை கருத்து: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டாக்டர் இடைநீக்கம்
சர்ச்சை கருத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டாக்டர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சென்னை, 

லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இது குறித்து ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டாக்டர் மது தொட்டப்பில்லில் டுவிட்டரில் கருத்து பதிவிட்டு இருந்தார். கொரோனா பாதிப்பு நிவாரணத்துக்காக திரட்டப்படும் பிரதமர் பராமரிப்பு நிதியை விமர்சிக்கும் வகையில், ‘சவப்பெட்டிகளில் பிரதமர் பராமரிப்பு ஸ்டிக்கர் ஓட்டப்பட்டு இருக்குமா? என்பதை பார்க்க விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் டுவிட்டர் பதிவை அவர் சிறிது நேரத்தில் நீக்கி விட்டார். டுவிட்டரில் சர்சைக்குரிய கருத்து தெரிவித்த டாக்டர் மது தொட்டப்பில்லிலை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அதிரடியாக இடைநீக்கம் செய்துள்ளது. அவரது தவறான கருத்துக்கு வருந்துவதாகவும் சென்னை அணி கூறியுள்ளது.