பிற விளையாட்டு

‘சீன பொருட்களை புறக்கணியுங்கள்’ - மல்யுத்த வீரர் சுஷில்குமார் வேண்டுகோள் + "||" + China objects ignore Wrestler Sushil Kumar appeals

‘சீன பொருட்களை புறக்கணியுங்கள்’ - மல்யுத்த வீரர் சுஷில்குமார் வேண்டுகோள்

‘சீன பொருட்களை புறக்கணியுங்கள்’ - மல்யுத்த வீரர் சுஷில்குமார் வேண்டுகோள்
சீன பொருட்களை புறக்கணியுங்கள் என்று மல்யுத்த வீரர் சுஷில்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி, 

லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய எதிர்பாராத தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ‘நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு தலைவணங்குவதாகவும், அவர்களது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் டுவிட்டர் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதேபோல் இந்திய கிரிக்கெட் சகாப்தம் சச்சின் தெண்டுல்கர், இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பெய்சூங் பூட்டியா, கிரிக்கெட் முன்னாள் வீரர்கள் ஷேவாக், கவுதம் கம்பீர், யுவராஜ்சிங், முகமது கைப், இர்பான் பதான், பத்ரிநாத், ஆகாஷ் சோப்ரா மற்றும் வீரர்கள் ஷிகர் தவான், விஜய் சங்கர் உள்பட பலரும் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது அனுதாபத்தை தெரிவித்துள்ளனர். 

இது குறித்து ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கம் வென்றவரான இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் கருத்து தெரிவிக்கையில், ‘சீனாவுக்கு எதிரான மோதலில் நமது ராணுவ வீரர்கள் உயிர்த் தியாகம் செய்ததை கேள்விப்பட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். நாட்டுக்கான சேவையில் உயிர்நீத்த வீரர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தலைவணங்குகிறேன். கொரோனாவுக்கு எதிராக ஒட்டு மொத்த உலகமும் இணைந்து போராடும் வேளையில் சீனா இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது. சீனாவுடன் நாம் நல்ல உறவை வைக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. சீனாவின் பொருட்களை வாங்காமல் மக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சீன பொருட்கள் நமது நாட்டுக்குள் நுழையாமல் தடுக்க அரசு கொள்கை ரீதியான முடிவு எடுக்க வேண்டும்‘ என்றார்.