கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்புபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு 2 முறை கொரோனா சோதனை + "||" + Pakistan cricketers to undergo coronavirus test twice before leaving for England tour: Report

இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்புபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு 2 முறை கொரோனா சோதனை

இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்புபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு 2 முறை கொரோனா சோதனை
இங்கிலாந்து புறப்படுவதற்கு முன்பு பாகிஸ்தான் வீரர்களுக்கு 2 முறை கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
லாகூர், -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் 3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக வருகிற 28-ந்தேதி லாகூரில் இருந்து தனிவிமானத்தில் இங்கிலாந்துக்கு புறப்பட்டு செல்கிறார்கள். அணியில் மொத்தம் 29 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இங்கிலாந்துக்கு கிளம்புவதற்கு முன்பாக பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர், பயிற்சி உதவியாளர்களுக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. 22-ந்தேதி அன்று வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று சோதனை நடத்தப்படும். 

அதன் பிறகு வீரர்கள் அனைவரும் 24-ந்தேதி லாகூரில் ஒன்றிணைவார்கள். அங்கு 2-வது முறையாக சோதனை நடத்தப்படும். பிறகு நட்சத்திர ஓட்டலில் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளுடன் வீரர்கள் சில நாட்கள் தனித்தனியே தங்கியிருப்பார்கள். சோதனை முடிவில் யாருக்காவது கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் அவர்கள் இங்கிலாந்து செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் கடத்த முயற்சி: எல்லை பாதுகாப்பு படை முறியடித்தது
பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள், போதைபொருட்களை கடத்தும் முயற்சியை இந்திய எல்லை பாதுகாப்பு படை வெற்றிகரமாக முறியடித்தது.
2. பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளை பொதுஇடத்தில் தூக்கிலிடுவது - ஆண்மை நீக்கம் செய்வதே தகுந்த தண்டனை - இம்ரான்கான்
பாலியல் வன்கொடுமை சம்பங்களில் ஈடுபடுபவர்களைப் பொதுஇடத்தில் தூக்கிலிடுவது அல்லது ஆண்மை நீக்கம் செய்வதே தகுந்த தண்டனையாக இருக்கும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறி உள்ளார்.
3. பாகிஸ்தானில் பருவ மழையால் 300 பேர் பலி
பாகிஸ்தான் அரசு கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் நிலையில் பருவமழையும் அங்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
4. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்- இந்தியா தக்க பதிலடி
எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
5. பாகிஸ்தானில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,00,955- ஆக உயர்வு
பாகிஸ்தானில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,00,955- ஆக உயர்ந்துள்ளது.