கிரிக்கெட்

வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்’கங்குலி நெகிழ்ச்சி + "||" + Was hoping he’d get a hundred’: Dravid, Ganguly recall epic India Test debuts

வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்’கங்குலி நெகிழ்ச்சி

வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்’கங்குலி நெகிழ்ச்சி
24 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (நேற்று) டெஸ்டில் அறிமுகம் ஆனதை தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று நினைவு கூர்ந்த கங்குலி, ‘வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்’ என்று குறிப்பிட்டு அந்த போட்டியில் தான் ஆடிய சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். ‘
கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 1996-ம் ஆண்டு ஜூன் 20-ந்தேதி லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். முதல் இன்னிங்சில் 20 பவுண்டரியுடன் 131 ரன்கள் விளாசிய கங்குலி, அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்த 10-வது இந்தியர் என்ற சிறப்பை பெற்றார். இதே டெஸ்டில் தான் மற்றொரு இந்திய ஜாம்பவான் ராகுல் டிராவிட்டும் அறிமுகம் ஆனார். அவர் முதல் இன்னிங்சில் 95 ரன்கள் குவித்தார். இந்த டெஸ்ட் டிராவில் முடிந்தது.

24 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (நேற்று) டெஸ்டில் அறிமுகம் ஆனதை தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று நினைவு கூர்ந்த கங்குலி, ‘வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்’ என்று குறிப்பிட்டு அந்த போட்டியில் தான் ஆடிய சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். ‘நான் ஆட்டம் இழந்த போது மறுமுனையில் டிராவிட் விளையாடிக் கொண்டு இருந்தார். மறுநாள் காலையில் அவர் தொடர்ந்து பேட்டிங் செய்தார். அவர் சதத்தை எட்டுவார் என்ற நம்பிக்கையோடு லார்ட்ஸ் பால்கனியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் 5 ரன்னில் சதத்தை நழுவ விட்டு விட்டார். அன்றைய தினம் அவரும் சதம் அடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்’ என்றும் கங்குலி கூறினார்.

2011-ம் ஆண்டு இதே நாளில் தான் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது டெஸ்ட் பயணத்தை தொடங்கினார். ஆனால் அவரது அறிமுக ஆட்டம் கவர்ந்திழுக்கும் வகையில் இல்லை. கிங்ஸ்டனில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் கோலி 4, 15 ரன்களில் ஆட்டம் இழந்தார். இருப்பினும் அந்த டெஸ்டில் இந்தியா 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.


தொடர்புடைய செய்திகள்

1. சகோதரருக்கு கொரோனா: கங்குலி தனிமைப்படுத்திக் கொண்டார்
தனது அண்ணனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதை அறிந்ததும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கங்குலி வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
2. அடுத்த ஐ.சி.சி. தலைவர் கங்குலி - கிரேமி சுமித் விருப்பம்
அடுத்த ஐ.சி.சி. தலைவராக கங்குலியை தேர்வு செய்ய வேண்டும் என்று கிரேமி சுமித் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
3. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்குமா? -கங்குலி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்குமா? என்பது குறித்து சவுரவ் கங்குலி விளக்கமளித்துள்ளார்.