கிரிக்கெட்

தோனி இல்லை என்றால் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை அன்றே முடிந்திருக்கும்- கவுதம் காம்பீர் பரபரப்பு தகவல் + "||" + Gautam Gambhir credits MS Dhoni for Virat Kohli’s turnaround post-2014 torrid England tour

தோனி இல்லை என்றால் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை அன்றே முடிந்திருக்கும்- கவுதம் காம்பீர் பரபரப்பு தகவல்

தோனி இல்லை என்றால் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை அன்றே முடிந்திருக்கும்- கவுதம் காம்பீர் பரபரப்பு தகவல்
தோனி மட்டும் அன்று கோலியை பாதுகாக்காமல் இருந்திருந்தால், கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்திருக்கும் என கவுதம் காம்பீர் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி


தோனி மட்டும் அன்று கோலியை பாதுகாக்காமல் இருந்திருந்தால், இன்று அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்திருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.

இந்திய அணி 50 ஓவர் போட்டியில் உலகக்கோப்பை வெல்வதற்கு காம்பீரும் ஒரு முக்கிய காரணம் என்று கூறலாம். இவர் முக்கியமான ஆட்டத்தின் போது, சிறப்பாக தனது பங்களிப்பை செய்து உள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று காம்பீர் இந்த ஊரடங்கு காலத்தில் பல தகவல்களை கூறி வருகிறார். அந்த வகையில் தோனியைப் பற்றி இப்போது அவர் பேசியுள்ளார்.

தோனியைப் பற்றி எப்போதுமே காம்பீர் விமர்சனம் செய்து தான் பேசுவார். ஆனால் இந்த முறை அவர் தோனியை புகழ்ந்து பேசியுள்ளார்.அதில், கடந்த 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து தொடர் கோலிக்கு மோசமான சுற்று பயணமாக இருந்தது. அந்த அணியில் நானும் இருந்தேன்.

ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடினேன். அந்த சுற்றுப்பயணத்தின் பலரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து இருக்கும். ஆனால் வீரர்கள் அனைவரும் தோனி என்ற ஆளுமையின் கீழ் பாதுகாப்பில் இருந்தனர்.

குறிப்பாக கோலிக்கு அவர் மிகவும் உறுதுணையாக இருந்தார். அடுத்தமுறை கோலி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அடித்து நொறுக்கினார்.அதுவும் பிரிம்மிங்காம் மைதானத்தில் கோலி அடித்த சதம் தற்போது வரை என்னால் மறக்க முடியாத அளவில் இருக்கிறது. அந்த அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதன் பின்னர் தான் கோலிலி தற்போது இருக்கும் சூப்பர் ஸ்டார் போல் மாறினார். 2014-ஆம் ஆண்டு 10 ஆட்டத்தில் சேர்த்து 134 ரன்களை மட்டுமே எடுத்த கோஹ்லி, 2017 ஆம் ஆண்டு 8 ஆட்டத்தில் 697 ரன்களை குவித்தார்.இதற்கு எல்லாம் காரணம் தோனி மட்டும் தான், அன்று கோலியை பாதுகாக்காமல் இருந்திருந்தால் தற்போதைய சூப்பர் ஸ்டார் கோலி இல்லவே இல்லை என்று காம்பீர் தெரிவித்துள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.
2. அக்தர் பந்தை எதிர்கொள்ள தெண்டுல்கர் பயப்படுவார், ஆனால் அவர் அதை ஏற்க மாட்டார் - அப்ரிடி
சோயிப் அக்தர் பந்தை எதிர்கொள்ள சச்சின் தெண்டுல்கர் பயப்படுவார், ஆனால் அவர் அதை ஏற்க மாட்டார் என்று ஷாகித் அப்ரிடி கூறி உள்ளார்.
3. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் என் கழுத்தில் கத்தியை வைத்தார் முன்னாள் பயிற்சியாளர் அதிர்ச்சி தகவல்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் என் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார் என பாகிஸ்தானின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்து உள்ளார்.
4. பழம்பெரும் கிரிக்கெட் வீரரும் வரலாற்றாசிரியருமான வசந்த் ராய்ஜி காலமானார்!
இந்திய அணியின் முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரரும், மும்பையை சேர்ந்த வரலாற்றாசிரியருமான வசந்த் ராய்ஜி காலமானார்.
5. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடிக்கு கொரோனா பாதிப்பு
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.