கிரிக்கெட்

‘இன்னும் 5 ஆண்டுகள் கோலி மிரட்டுவார்’- டிவில்லியர்ஸ் + "||" + Kholi will shine for another 5 years - De villiers

‘இன்னும் 5 ஆண்டுகள் கோலி மிரட்டுவார்’- டிவில்லியர்ஸ்

‘இன்னும் 5 ஆண்டுகள் கோலி மிரட்டுவார்’- டிவில்லியர்ஸ்
‘இன்னும் 5 ஆண்டுகள் கோலி மிரட்டுவார்’ என்று டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
மும்பை,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான டிவில்லியர்ஸ், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘இந்த ஊரடங்கு கூட விராட் கோலிக்கு நல்லதாக இருக்கலாம். இதன் மூலம் அவர் புத்துணர்ச்சியுடன் மீண்டும் களம் திரும்ப முடியும். அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் விராட் கோலியிடம் இருந்து பெரிய விஷயங்களை எதிர்பார்க்கிறேன்’ என்றார். ‘ஒரு பேட்ஸ்மேனாக கோலி என்னை விட நம்பிக்கைக்குரியவராக இருக்கிறார். ஐ.பி.எல்.-ல் களம் கண்டால் 15 ஓவர்கள் விளையாட வேண்டும் என்று விரும்புவார்’ என்றும் குறிப்பிட்டார்.


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சிறந்த லெவன் அணியை தேர்வு செய்து டிவில்லியர்ஸ் வெளியிட்டார். அந்த அணிக்கு டோனியை கேப்டனாக நியமித்துள்ளார். அவரது ஐ.பி.எல். கனவு அணி வருமாறு:- ரோகித் சர்மா, ஷேவாக், விராட் கோலி, டிவில்லியர்ஸ், பென் ஸ்டோக்ஸ், டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ரஷித்கான், புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, காஜிசோ ரபடா.

தொடர்புடைய செய்திகள்

1. டோனியின் சாதனையை முறியடித்தார், கோலி
டோனியின் சாதனையை பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முறியடித்தார்.
2. ரோகித் சர்மாவை விட கோலியே சிறந்த பேட்ஸ்மேன் - பிராட் ஹாக் கணிப்பு
ரோகித் சர்மாவை விட கோலியே சிறந்த பேட்ஸ்மேன் என்று பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
3. சிறந்த பேட்ஸ்மேன் தெண்டுல்கரா? கோலியா? - கம்பீர் பதில்
சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் தெண்டுல்கரா அல்லது விராட்கோலியா என்ற கேள்விக்கு கவுதம் கம்பீர் பதில் அளித்துள்ளார்.
4. உலகின் சிறந்த பேட்ஸ்மேன் கோலி - இயான் சேப்பல்
தற்போது உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி தான் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.
5. தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை கோலியால் முறியடிக்க முடியும் - பிரெட்லீ சொல்கிறார்
தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை கோலியால் முறியடிக்க முடியும் என்று பிரெட்லீ தெரிவித்துள்ளார்.