கிரிக்கெட்

ஐ.சி.சி. தலைவர் பதவியில் இருந்து விலகினார், ஷசாங் மனோகர் + "||" + Shashank Manohar resigns as ICC Chairman

ஐ.சி.சி. தலைவர் பதவியில் இருந்து விலகினார், ஷசாங் மனோகர்

ஐ.சி.சி. தலைவர் பதவியில் இருந்து விலகினார், ஷசாங் மனோகர்
பதவி காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து ஐ.சி.சி. தலைவர் பதவியில் இருந்து ஷசாங் மனோகர் நேற்று விலகினார்.
துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் ஷசாங் மனோகர் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பரில் இருந்து பணியாற்றி வந்தார். 3-வது முறையாக பொறுப்பில் நீடிக்க விரும்பவில்லை என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் பதவி காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து பொறுப்பில் இருந்து ஷசாங் மனோகர் நேற்று விலகினார்.


புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரை துணைத்தலைவர் இம்ரான் கவாஜா (சிங்கப்பூர்) இடைக்கால தலைவராக செயல்படுவார் என்று ஐ.சி.சி. வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான நடைமுறை ஒரு வாரத்திற்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம்ரான் கவாஜா, இங்கிலாந்தின் காலின் கிரேவ், இந்தியாவின் சவுரவ் கங்குலி உள்ளிட்டோரின் பெயர்கள் அடுத்த ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு அடிபடுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து விலகினார், நடால் இந்திய வீரர் சுமித் நாகலுக்கு அதிர்ஷ்டம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து ஸ்பெயின் வீரரான நடப்பு சாம்பியன் நடால் விலகினார்.
2. ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு கங்குலி பொருத்தமானவர்: சங்கக்கரா பேட்டி
ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி பொருத்தமானவராக இருப்பார் என்று இலங்கை முன்னாள் வீரர் சங்கக்கரா கூறியுள்ளார்.