கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் என் கழுத்தில் கத்தியை வைத்தார் முன்னாள் பயிற்சியாளர் அதிர்ச்சி தகவல் + "||" + Younis Khan brought a knife to my throat in Brisbane: Former Pakistan batting coach Grant Flower narrates shocking incident

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் என் கழுத்தில் கத்தியை வைத்தார் முன்னாள் பயிற்சியாளர் அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் என் கழுத்தில் கத்தியை வைத்தார் முன்னாள் பயிற்சியாளர் அதிர்ச்சி தகவல்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் என் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார் என பாகிஸ்தானின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி

பாகிஸ்தானின் பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றிய ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த கிராண்ட் பிளவர் தனது  பயிற்சி அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.அதில் அவர் கூறி இருப்பதாவது:-

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கானுக்கு ஒருமுறை சில ஆலோசனைகளை வழங்க முயன்றேன். அப்போது அவர் என் கழுத்தில் கத்தியை வைத்தார் என கூறி உள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) சமீபத்தில் முன்னாள் அணியின் கேப்டன் யூனிஸ் கானை தேசிய அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும், முஷ்தாக் அகமதுவை ஸ்பின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு நியமிப்பதாக அறிவித்து உள்ளது.

யூனுஸ்கான் டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்காக 10000 ரன்களுக்கு மேல் அடித்து உள்ளார். ஐ.சி.சி தரவரிசையில் சிறந்த பேட்ஸ்மேனாக தொடர்ந்தார். அவர் 2017 ஆம் ஆண்டில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார், அங்கு அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம் மீது இளம்பெண் பாலியல் புகார்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம் மீது இளம்பெண் பாலியல் புகார். தன்னை 10 வரும ஏமாற்றியதாக கூறி உள்ளார்.
2. ஜம்மு காஷ்மீர்: எல்லையில் பாக்.ட்ரோன் விமானம் பறந்ததால் பரபரப்பு
ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தானுக்கு சொந்தமான ட்ரோன் விமானம் பறந்தது.
3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி 50 ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட இந்திய அணிக்கு ஐசிசி அபராதம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி 50 ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட இந்திய அணிக்கு ஐசிசி அபராதம் விதித்தி உள்ளது.
4. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
5. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கடந்த பத்தாண்டுகளில் சிறந்த வீரருக்கான விருதுக்கு விராட் கோலி, அஸ்வின் பரிந்துரை
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த பத்தாண்டுகளில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்திய வீரர் விருதுக்கு விராட் கோலி, அஸ்வினை பரிந்துரைத்து உள்ளது.