கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு பேர்ஸ்டோவுக்கு இடமில்லை + "||" + First Test against the West Indies

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு பேர்ஸ்டோவுக்கு இடமில்லை

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு பேர்ஸ்டோவுக்கு இடமில்லை
3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.
லண்டன்,

3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் வருகிற 8-ந் தேதி தொடங்குகிறது. ரசிகர்கள் இன்றி மருத்துவ பாதுகாப்புக்கு மத்தியில் நடக்க உள்ள இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தனது மனைவிக்கு 2-வது குழந்தை பிறக்க இருப்பதால் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோரூட் முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ‘ஆல்-ரவுண்டர்’ பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த தென்ஆப்பிரிக்க தொடரில் விளையாடிய பேட்ஸ்மேன் ஜோ டென்லி அணியில் இடத்தை தக்க வைத்துள்ளார். சீனியர் வீரர்களான ஜானி பேர்ஸ்டோ, மொயீன் அலி ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.


முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி வருமாறு:- பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோப்ரா ஆர்ச்சர், டோமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஜாக் கிராவ்லி, ஜோ டென்லி, ஆலிவர் போப், டாம் சிப்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

மாற்று வீரர்கள்: ஜேம்ஸ் பிராசி, சாம் கர்ரன், பென் போக்ஸ், டான் லாரன்ஸ், ஜாக் லீச், சாகிப் மக்மூத், கிரேக் ஓவெர்டன், ஆலிவர் ராபின்சன், ஆலிவர் ஸ்டோன்.