கிரிக்கெட்

விளையாட்டு துளிகள்.... + "||" + sports points

விளையாட்டு துளிகள்....

விளையாட்டு துளிகள்....
விளையாட்டு துளிகள்....
*ஈடன்கார்டன் மைதான அலுவலர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளதால் பெங்கால் கிரிக்கெட் சங்க அலுவலகம் நேற்று மூடப்பட்டது. அடுத்த 7 நாட்கள் அலுவலகம் இயங்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

*இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமால் அளித்த ஒரு பேட்டியில், ‘ஐபி.எல். கிரிக்கெட்டை பணம் கொழிக்கும் எந்திரம் என்று அனைவரும் பேசுகிறார்கள். ஆனால் இந்த பணம் யாருக்கு செல்கிறது? இதன் மூலம் கிடைக்கும் பணம் கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி வீட்டுக்கோ அல்லது செயலாளர் ஜெய் ஷா வீட்டுக்கோ கொண்டு செல்லப்படவில்லை. வீரர்களுக்கும், போட்டியை நடத்தும் பணிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கும், வரிப்பணம் வாயிலாக கோடிக்கணக்கில் அரசாங்கத்திற்கும் தான் செல்கிறது’ என்றார். பாதுகாப்பான சூழல் உருவான பிறகே ஐ.பி.எல். போட்டி நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


*விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக இருந்து கொண்டு, சக வீரர்களின் வர்த்தக விவகாரங்களை கையாளும் நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் அடங்கிய மற்றொரு நிறுவனத்தின் இயக்குனராகவும் இருக்கிறார். இதன் மூலம் அவர் இரட்டை ஆதாயம் பெறுவதாக மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர் சஞ்ஜீவ் குப்தா, கிரிக்கெட் வாரியத்தின் நெறிமுறை அதிகாரி டி.கே.ஜெயினுக்கு புகார் அனுப்பி உள்ளார். இந்த புகார் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உகந்ததா என்பதை படித்து பார்த்து அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.கே.ஜெயின் தெரிவித்தார்.

*இந்திய கிரிக்கெட் அணியின் திருத்தப்பட்ட புதிய போட்டி அட்டவணை மற்றும் முதல் தர போட்டிகளை எப்போது தொடங்குவது என்பது குறித்து முடிவு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு கூட்டம் வருகிற 17-ந்தேதி நடக்கிறது.