கிரிக்கெட்

விளையாட்டு துளிகள்.... + "||" + Game Drops ....

விளையாட்டு துளிகள்....

விளையாட்டு துளிகள்....
விளையாட்டு துளிகள்....
* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனி கடந்த ஆண்டு ஜூலை மாதம் முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை. ஐ.பி.எல். போட்டி மூலம் அடுத்த சுற்று வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த போட்டி தள்ளிப்போனதால் அவரது ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய டோனிக்கு இன்று 39-வது வயது பிறக்கிறது. இதையொட்டி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளம் மூலம் வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க கவுரவ உறுப்பினராக இருந்து வந்த டோனி ஆயுட்கால உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் இனி அவர் மாநில கிரிக்கெட் சங்க தேர்தலில் வாக்களிக்க முடியும்.


* சவுதம்டனில் நாளை தொடங்கும் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. அப்படி நடந்தால் கடந்த 8 ஆண்டுகளில் உள்ளூர் டெஸ்ட் போட்டியில் பிராட்டுக்கு இடம் கிடைக்காமல் போவது இதுவே முதல்முறையாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. விளையாட்டு துளிகள்.......
விளையாட்டு துளிகள்.......
2. விளையாட்டு துளிகள்...
பெண்கள் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி 6-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...