கிரிக்கெட்

கரிபீயன் பிரிமியர் லீக் கிரிக்கெட்டில் இந்திய வீரர் பிரவீன் தாம்பே + "||" + In Caribbean Premier League cricket Indian player Praveen Tambe

கரிபீயன் பிரிமியர் லீக் கிரிக்கெட்டில் இந்திய வீரர் பிரவீன் தாம்பே

கரிபீயன் பிரிமியர் லீக் கிரிக்கெட்டில் இந்திய வீரர் பிரவீன் தாம்பே
இந்த ஆண்டுக்கான கரிபீயன் பிரிமியர் லீக் (சி.பி.எல்.) கிரிக்கெட் போட்டி ஆகஸ்டு 18-ந் தேதி முதல் செப்டம்பர் 10-ந் தேதி வரை வெஸ்ட்இண்டீசில் நடக்கிறது.
புதுடெல்லி,

இந்த ஆண்டுக்கான கரிபீயன் பிரிமியர் லீக் (சி.பி.எல்.) கிரிக்கெட் போட்டி ஆகஸ்டு 18-ந் தேதி முதல் செப்டம்பர் 10-ந் தேதி வரை வெஸ்ட்இண்டீசில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கான வீரர்கள் ஒதுக்கீடு நேற்று முன்தினம் நடந்தது. இதில் பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி இந்திய வீரர் பிரவீன் தாம்பேவை தேர்வு செய்து இருக்கிறது. இந்த அணிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான நடிகர் ஷாருக்கான் இணை உரிமையாளராக இருக்கிறார். இரண்டு முதல் தர போட்டியில் விளையாடி இருக்கும் 48 வயது சுழற்பந்து வீச்சாளரான பிரவீன் தாம்பே கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் அடிப்படை விலைக்கு வாங்கப்பட்டார். அபுதாபியில் கடந்த ஆண்டு நடந்த 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி பெறாமல் பங்கேற்றதற்காக அவரை வரும் சீசனுக்கான ஐ.பி.எல். போட்டியில் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடியாக தடை விதித்தது. ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகளில் அங்கம் வகித்து இருக்கும் பிரவீன் தாம்பே 2016-ம் ஆண்டுக்கு பிறகு அந்த போட்டியில் விளையாடவில்லை. டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பதன் மூலம் கரிபீயன் பிரிமியர் லீக் போட்டியில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமை பிரவீன் தாம்பேவுக்கு கிடைக்க இருக்கிறது.