கிரிக்கெட்

விளையாட்டு துளிகள்..... + "||" + sports Drops

விளையாட்டு துளிகள்.....

விளையாட்டு துளிகள்.....
இந்திய கிரிக்கெட் அணி எப்பொழுதும் அதிக அளவில் போட்டிகளில் விளையாடி வருகிறது.
* இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி அளித்த ஒரு பேட்டியில், ‘இந்த சீசனுக்கான உள்ளூர் மற்றும் ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளை தொடங்குவது அவசியமானது தான். ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் முடிந்து எப்பொழுது பாதுகாப்பான சூழ்நிலை ஏற்படுகிறதோ?, அப்போது தான் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்படும். பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவும் வரை கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடத்தப்படமாட்டாது’ என்றார்.


* இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய கிரிக்கெட் அணி எப்பொழுதும் அதிக அளவில் போட்டிகளில் விளையாடி வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக கிடைத்து இருக்கும் இந்த இடைவெளி உடல் ரீதியான சோர்வை போக்க வழிவகுப்பதுடன், உடல் திறனையும் அதிகரிக்க உதவும். அதேநேரத்தில் நீண்ட நாட்களாக விளையாடாததால் ஆட்ட ரிதம் பாதிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.