கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை + "||" + First Test against England: West Indies lead

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 318 ரன்களுக்கு ஆட்டம் இழந்து 114 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
சவுதம்டன்,

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நடந்து வருகிறது. முதல் நாளில் பலத்த மழை காரணமாக 17.4 ஓவர்கள் மட்டுமே பந்து வீசப்பட்டன. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 2-வது நாள் தேனீர் இடைவேளைக்கு முன்பாக முதல் இன்னிங்சில் 204 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்திருந்தது. கிரேக் பிராத்வெய்ட் 20 ரன்களுடனும், ஷாய் ஹோப் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இரண்டாம் நாளில், நடுவர்களான இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் கெட்டில்போரப், ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோரின் செயல்பாடு விமர்சனத்திற்கு உள்ளானது. அவர்களது ஐந்து எல்.பி.டபிள்யூ. கணிப்பு தவறாக அமைந்ததும், டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதால் அத்தகைய தவறுகள் சரிசெய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பால் டெஸ்ட் போட்டியில் உள்ளூர் நடுவர்களை தற்காலிகமாக பயன்படுத்த ஐ.சி.சி. அனுமதி அளித்திருக்கிறது. ஆனால் இந்த டெஸ்டில் இங்கிலாந்து நடுவர்கள் உள்ளூர் அணிக்கு சாதகமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சலசலப்புக்கு மத்தியில் 3-வது நாளான நேற்று வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சு தாக்குதலை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நிதானமாக எதிர்கொண்டு சமாளித்தனர். ஸ்கோர் 102 ரன்களாக உயர்ந்த போது ஷாய் ஹோப் (16 ரன்) டாம் பெஸ்சின் சுழலில் சிக்கினார்.

மறுமுனையில் நேர்த்தியாக விளையாடி அரைசதத்தை கடந்த பிராத்வெய்ட், பென் ஸ்டோக்சின் ஒரே ஒவரில் 3 பவுண்டரி விளாசியதோடு அதே ஓவரில் எல்.பி.டபிள்யூ. ஆனார். பிராத்வெய்ட் 65 ரன்களில் (125 பந்து, 6 பவுண்டரி) வெளியேறினார். இதன் பின்னர் ஷமார் புரூக்ஸ் 39 ரன்னிலும், ஜெர்மைன் பிளாக்வுட் 12 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்.

இதைத் தொடர்ந்து 6-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஆல்-ரவுண்டர் ரோஸ்டன் சேசும், விக்கெட் கீப்பர் ஷேன் டாவ்ரிச்சும் அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் முன்னிலையும் பெற வைத்தனர். ஸ்கோர் 267 ரன்களை எட்டிய போது இந்த கூட்டணியை ஆண்டர்சன் உடைத்தார். ரோஸ்டன் சேஸ் 47 ரன்களில் ஆட்டம் இழந்தார். டாவ்ரிச் தனது பங்குக்கு 61 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஜாசன் ஹோல்டர் (5 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை.

முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 102 ஓவர்களில் 318 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டும், டாம் பெஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து 114 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை ஆடியது.


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் மேலும் 7 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 290- பேர் உயிரிழந்துள்ளனர்
2. இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இந்திய அணியிலிருந்து பும்ரா விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் பும்ரா விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது
3. பிரிட்டனில் மேலும் 8,523- பேருக்கு கொரோனா
பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 8,523- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட்: இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்ப்பு
தனது உடற்தகுதியை நிரூபித்ததால் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார்.
5. ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் மே 15-ந் தேதி விசாரணை
ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் மே 15-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.