கிரிக்கெட்

ஒரு நாள் கிரிக்கெட்டில் எந்த வரிசையிலும் பேட்டிங் செய்ய தயார் ரஹானே பேட்டி + "||" + Ready to bat in any order Interview with Rahane

ஒரு நாள் கிரிக்கெட்டில் எந்த வரிசையிலும் பேட்டிங் செய்ய தயார் ரஹானே பேட்டி

ஒரு நாள் கிரிக்கெட்டில் எந்த வரிசையிலும் பேட்டிங் செய்ய தயார் ரஹானே பேட்டி
இந்திய ஒரு நாள் போட்டி அணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறேன்
மும்பை,

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் அஜிங்யா ரஹானே கிரிக்கெட் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், ‘இந்திய ஒரு நாள் போட்டி அணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறேன். இதைத் தான் எனது உள்ளுணர்வும் சொல்கிறது. ஒரு நாள் போட்டியை பொறுத்தவரை தொடக்க வரிசையோ அல்லது 4-வது வரிசையோ எந்த வரிசையில் பேட்டிங் செய்ய சொன்னாலும் அதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால் வாய்ப்பு எப்போது வரும் என்பது தெரியாது. மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாட மனரீதியாக தயாராக உள்ளேன். திறமை மீது நம்பிக்கை வைத்து நேர்மறையான எண்ணத்துடன் இருப்பது முக்கியம்.’ என்றார். இதுவரை 90 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் 32 வயதான ரஹானே கடைசியாக 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆடி இருந்தார்.