கிரிக்கெட்

மனைவி பற்றிய ரசிகரின் கேள்விக்கு புவனேஷ்குமார் அளித்த சுவையான பதில்... + "||" + Bhuvneshkumar's response to fan's query about wife

மனைவி பற்றிய ரசிகரின் கேள்விக்கு புவனேஷ்குமார் அளித்த சுவையான பதில்...

மனைவி பற்றிய ரசிகரின் கேள்விக்கு புவனேஷ்குமார் அளித்த சுவையான பதில்...
இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்குமார் தனது மனைவி பற்றிய ரசிகரின் கேள்விக்கு சுவையான பதிலளித்து உள்ளார்.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட்  அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்குமார்.  இவரது மனைவி நுபுர்.  ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு புவனேஷ்குமார் இன்று சுவையாக பதில் அளித்துள்ளார்.  அவரிடம் ஒரு ரசிகர், இந்த உலகில் எவற்றையேனும் உருமாற்றும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால் எதனை மாற்றுவீர்கள்? என கேட்டுள்ளார்.

அதற்கு அவர், உலகம் நன்றாகவே இருக்கிறது.  மாற்றம் செய்ய வேண்டிய தேவை இல்லை என கூறியுள்ளார்.

இதேபோன்று மற்றொரு ரசிகர், முதல் சம்பளம் எவ்வளவு? அதனை வைத்து என்ன செய்தீர்கள் என ஞாபகம் இருக்கா? என கேட்டுள்ளார்.

ரூ.3 ஆயிரம் வாங்கினேன்.  பின்பு கடைக்கு சென்று எனக்கு தேவையானவற்றை வாங்கி கொண்டேன்.  ஒரு குறிப்பிட்ட தொகையை எனது சேமிப்பிலும் வைத்து கொண்டேன் என பதிலளித்து உள்ளார்.

அவரிடம் மற்றொரு ரசிகர், உங்களுடைய மனைவி நுபுர் பற்றி ஒரு சில வார்த்தைகளில் கூறுங்கள் என கேட்டுள்ளார்.  அதற்கு மகிழ்ச்சியுடனும், நகைச்சுவையுடனும் பதிலளித்துள்ள புவனேஷ்குமார், அறிவார்ந்தவர்.  பன்முக செயலாற்றல் கொண்டவர்.  அவர் ஒரு நாய் பிரியர்.  சில சமயங்களில் அவர்கள் எனக்கு முன் வந்துவிடுவார்கள் என கூறியுள்ளார்.

இதேபோன்று ரசிகர் ஒருவர், உங்களை பற்றி மீம்கள் வரும்பொழுது உங்களது பதில்வினை என்னவாக இருக்கும் என கேட்டுள்ளார்.  அதற்கு அவர், நான் சிரித்து விடுவேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றம்? பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் பதில்
முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றப்படுவாரா என்பது குறித்த கேள்விக்கு நளின்குமார் கட்டீல் பதிலளித்துள்ளார்.
2. கொரோனா பாதிப்பை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் பதில்
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் காமராஜ் பதில் அளித்துள்ளார்.
3. அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படுமா? எடப்பாடி பழனிசாமி பதில்
அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படுமா? என்பதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.