கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி! + "||" + Jermaine Blackwood knock guides West Indies to victory against England

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.
சவுதம்டன், 

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நடந்து வருகிறது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து 204 ரன்னில் சுருண்டது. ஜாசன் ஹோல்டர் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி கிரேக் பிராத்வெய்ட் (65 ரன்), ஷேன் டாவ்ரிச் (61 ரன்) ஆகியோரது அரைசதங்களின் உதவியுடன் 318 ரன்கள் சேர்த்து ‘ஆல்-அவுட்’ ஆனது. பின்னர் 114 ரன்கள் பின்தங்கிய நெருக்கடியுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி  313 ரன்களை சேர்த்தது. 

இதையடுத்து 200 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய நிலையில், 95 ரன்கள் சேர்த்த ஜெர்மைன் பிளாக்வுட்டின் சிறப்பான ஆட்டம் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து இரு இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட்டுகள் வீழ்த்திய, மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷானன் கேப்ரியல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.                   


தொடர்புடைய செய்திகள்

1. பாலியல் பலாத்கார மிரட்டல்! ஒவ்வொரு நொடியும் பயம்...பிரபல கிரிக்கெட் வீரர் மனைவியின் பரிதாப நிலை
பாலியல் பலாத்கார மிரட்டல்! ஒவ்வொரு நொடியும் பயம்... வாழ்த்து கூறிய பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
2. ஐபிஎல் 2020 போட்டி அட்டவணை நாளை அறிவிக்கும் வாய்ப்பு...?
ஐபிஎல் போட்டி அட்டவணை இன்று மாலை அல்லது நாளை அறிவிக்கப்படும் என பிசிசிஐயின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
3. சென்னை அணி எனது குடும்பத்தைப் போன்றது; டோனி எனது மூத்த சகோதரர்- சுரேஷ் ரெய்னா உருக்கம்
சென்னை அணி எனது குடும்பத்தைப் போன்றது டோனி எனது மூத்த சகோதரர் விரைவில் சிஎஸ்கே அணிக்கு மீண்டும் திரும்புவேன் என சுரேஷ் ரெய்னா கூறினார்.
4. டோனி புதிய இந்தியாவின் அடையாளம் - பிரதமர் மோடி
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டோனியை வாழ்த்தி பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதி உள்ளார்.
5. ஜெர்மனி கிரிக்கெட் வரலாற்றை மாற்றி எழுத வைத்துள்ள இந்திய பெண்
ஒரு இந்திய பெண், ஜெர்மனி கிரிக்கெட் வரலாற்றை மாற்றி எழுத வைத்துள்ளார்.