கிரிக்கெட்

20 ஓவர் உலக கோப்பை குறித்து அடுத்த ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு + "||" + Regarding the 20 Over World Cup The next ICC Meeting results

20 ஓவர் உலக கோப்பை குறித்து அடுத்த ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு

20 ஓவர் உலக கோப்பை குறித்து அடுத்த ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு
20 ஓவர் உலக கோப்பை குறித்து அடுத்த ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஐ.சி.சி. நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
துபாய், 

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா அச்சத்தால் இந்த போட்டி தள்ளிவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் முடிவு எடுப்பதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது.

இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் தலைவிதி குறித்து அடுத்த ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஐ.சி.சி. நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். கூட்டத்திற்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், அனேகமாக அடுத்த ஒரு வாரத்திற்குள் இந்த கூட்டம் நடக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.