வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மோர்தசா கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார்


வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மோர்தசா கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார்
x
தினத்தந்தி 15 July 2020 10:14 PM GMT (Updated: 2020-07-16T03:44:41+05:30)

வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மோர்தசா கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார்.

வங்காளதேசம்,

*வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மோர்தசா கடந்த மாதம் 20-ந்தேதி கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்றார். தற்போது கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்ட அவர் தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ஆனால் அவரது மனைவி இந்த பாதிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை.

*மீண்டும் விளையாட்டு போட்டிகளை எப்போது தொடங்குவது என்பதில் நிலைமையை ஆராய்ந்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் கூறியுள்ளது. முடிந்த அளவுக்கு அடுத்த 2-3 மாதங்களில் ஒரு சில விளையாட்டு நடவடிக்கைகளையாவது தொடங்கும்படி மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களை விளையாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

*‘திட்டமிட்டபடி இந்த ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடந்திருந்தால் இந்திய ஆண்கள் ஆக்கி அணி நிச்சயம் ஏதாவது ஒரு பதக்கம் வென்றிருக்க கூடும். அதற்கு பிரகாசமான வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்திய அணியின் உத்வேகத்துக்கு இப்போது முட்டுக்கட்டை விழுந்து விட்டது. இது மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். எனவே அடுத்த ஆண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியும் என்பதை இப்போது சொல்ல முடியாது’ என்று ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற அணியில் இடம் பிடித்த இந்திய ஆக்கி ஜாம்பவான் அசோக்குமார் கூறியுள்ளார்.

Next Story