கிரிக்கெட்

2வது டெஸ்ட்; விதிகளை மீறிய ஆர்ச்சர் போட்டியில் இருந்து வெளியேற்றம் + "||" + Exit from Archer match for violating 2nd Test rules

2வது டெஸ்ட்; விதிகளை மீறிய ஆர்ச்சர் போட்டியில் இருந்து வெளியேற்றம்

2வது டெஸ்ட்; விதிகளை மீறிய ஆர்ச்சர் போட்டியில் இருந்து வெளியேற்றம்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விதிகளை மீறியதற்காக இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார்.
மான்செஸ்டர்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ரசிகர்கள் இன்றி சவுதம்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டு ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது.

இங்கிலாந்து அணியின் ஜோப்ரா ஆர்ச்சர் 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார்.  கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் மருத்துவ பாதுகாப்புடன் இரு அணிகளும் விளையாடி வரும் நிலையில், அணியின் பாதுகாப்பு விதிகளை ஆர்ச்சர் மீறிய குற்றத்திற்காக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, அவர் 5 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருந்திடுவார்.  அதனுடன், கொரோனா பரிசோதனை அவருக்கு 2 முறை நடத்தப்படும்.  அவரது சுய தனிமைப்படுத்துதல் காலம் முடிவடைவதற்குள், பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என முடிவு வர வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜப்பானை மிரட்டும் ஹாய்ஷென் சூறாவளி; 8.1 லட்சம் மக்கள் வெளியேற்றம்
ஜப்பானின் தெற்கு பகுதியை நோக்கி ஹாய்ஷென் சூறாவளி நெருங்கி வரும் நிலையில் 8.1 லட்சம் மக்களை அரசு வெளியேற்றி உள்ளது.
2. இறுதி டெஸ்ட் போட்டி; இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் மீண்டும் சேர்ப்பு
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதியான நிலையில் இறுதி டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
3. உளவு பார்த்த 2 அதிகாரிகள் வெளியேற்றம்: இந்திய தூதரக அதிகாரியை அழைத்து பாகிஸ்தான் கண்டனம்
உளவு பார்த்த 2 தூதரக அதிகாரிகளை இந்தியா வெளியேற்றியதை தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மூத்த அதிகாரியை பாகிஸ்தான் அழைத்து தனது கண்டனத்தை தெரிவித்தது.
4. அமெரிக்காவில் இருந்து சீன மாணவர்கள் வெளியேற்றம்? - விரைவில் முடிவு
அமெரிக்காவில் இருந்து சீன மாணவர்கள் வெளியேற்றுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.