இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: 3-வது நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு


இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: 3-வது நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு
x
தினத்தந்தி 18 July 2020 7:59 PM GMT (Updated: 18 July 2020 7:59 PM GMT)

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது.

மான்செஸ்டர்,

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 9 விக்கெட்டுக்கு 469 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. டாம் சிப்லி (120 ரன்), பென் ஸ்டோக்ஸ் (176 ரன்) சதம் அடித்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது நாள் முடிவில் 14 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 32 ரன்கள் எடுத்திருந்தது. கிரேக் பிராத்வெய்ட் 6 ரன்னுடனும், அல்ஜாரி ஜோசப் 14 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்றைய ஆட்டம் மழையால் முழுமையாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஒரு பந்து கூட வீசப்படாமல் 3-வது நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Next Story