கிரிக்கெட்

இறுதி டெஸ்ட் போட்டி; இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் மீண்டும் சேர்ப்பு + "||" + Final Test Match; England fast bowler Archer rejoins

இறுதி டெஸ்ட் போட்டி; இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் மீண்டும் சேர்ப்பு

இறுதி டெஸ்ட் போட்டி; இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் மீண்டும் சேர்ப்பு
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதியான நிலையில் இறுதி டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
லண்டன்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ரசிகர்கள் இன்றி சவுதம்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதன்பின் 2வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டு ஸ்டேடியத்தில் நடந்தது.  இந்த போட்டியில், இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் இங்கிலாந்து 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் வருகிற 24ந்தேதி தொடங்குகிறது.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி நடைபெறுவதற்கு முன், மருத்துவ பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றத்திற்காக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.  இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, அவர் ஓல்ட் டிராப்போர்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் 5 நாட்கள் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டார்.  சில கட்டுப்பாடுகளுடன் உடற்பயிற்சி செய்வதற்கு அனுமதிக்கப்பட்டார்.  இதன்பின்னர், தொடர்ச்சியாக அவருக்கு 2 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.  இதில், அவருக்கு கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என முடிவு வந்துள்ளது.  இதனை தொடர்ந்து தொடரை முடிவு செய்யும் இறுதி போட்டியில் அவர் சேர்க்கப்பட்டு உள்ளார்.  இது இங்கிலாந்து அணிக்கு உத்வேகம் அளிக்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. 2வது டெஸ்ட்; விதிகளை மீறிய ஆர்ச்சர் போட்டியில் இருந்து வெளியேற்றம்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விதிகளை மீறியதற்காக இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளார்.