கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் - பிரிஜேஷ் படேல் தகவல் + "||" + IPL Cricket matches to be held in UAE in September - Brijesh Patel Info

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் - பிரிஜேஷ் படேல் தகவல்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் - பிரிஜேஷ் படேல் தகவல்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என ஐ.பி.எல். நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளதால், போட்டியை எங்கள் நாட்டில் நடத்தலாம் என அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்தது. மேலும் ஐ.பி.எல். போட்டியை இலங்கையில் நடத்த இலங்கை அரசும் விருப்பம் தெரிவித்திருந்தது.


இதுகுறித்து ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் படேல், ஐ.பி.எல். அட்டவணையை இறுதி செய்வது பற்றி 10 நாளில் ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். ஐ.பி.எல். தொடரை நடத்துவது குறித்து மத்திய அரசிடம் அனுமதி கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய், அபுதாபி, ஷார்ஜா நகரங்களில் போட்டிகளை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் போட்டி அட்டவணை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஆரவாரம் இன்றி அரங்கேறப்போகும் ஐ.பி.எல். கிரிக்கெட்
கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஆரவாரம் இன்றி அரங்கேறப்போகும் ஐ.பி.எல். கிரிக்கெட்
2. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் எழுச்சி பெறுமா?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி எழுச்சி பெறுமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு; தொடக்க ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. வருகிற 19-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து ஹர்பஜன்சிங் விலகல் - சென்னை அணிக்கு மேலும் ஒரு சறுக்கல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், சொந்த காரணங்களுக்காக விலகினார்.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி நாளை மறுநாள் தொடக்கம்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி துபாயில் நாளை மறுநாள் தொடங்குகிறது.