அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு


அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
x
தினத்தந்தி 28 July 2020 12:23 AM GMT (Updated: 28 July 2020 12:23 AM GMT)

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சவுதம்டன், 

இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் சவுதம்டனில் முறையே வருகிற 30-ந் தேதி, ஆகஸ்டு 1 மற்றும் 4-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டி தொடருக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வரும் கேப்டன் ஜோ ரூட், ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ்பட்லர், வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட ஜோ டென்லி அணியில் இடம் பிடித்துள்ளார்.

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இங்கிலாந்து அணி வருமாறு:-

இயான் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, பேர்ஸ்டோ, டாம் பான்டன், சாம் பில்லிங்ஸ், டாம் கர்ரன், லியாம் டாவ்சன், ஜோ டென்லி, சாகிப் மக்மூத், அடில் ரஷித், ஜாசன் ராய், ரீசி டாப்லி, ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் வில்லி.


Next Story