கொரோனா பிரச்சினை நீடித்தால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து யோசிப்பேன்: வார்னர் சொல்கிறார் + "||" + I will think about retiring from cricket if the corona problem persists: Warner says
கொரோனா பிரச்சினை நீடித்தால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து யோசிப்பேன்: வார்னர் சொல்கிறார்
கொரோனா பிரச்சினை நீடித்தால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து யோசிப்பேன் என்று வார்னர் தெரிவித்துள்ளார்.
சிட்னி,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘எனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுக்கும் நான் நிறைய நன்றிக்கடன்பட்டு இருக்கிறேன். அவர்கள் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறார்கள். எப்போதும் உங்கள் குடும்பத்தை பார்த்துகொள்வதற்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இந்த இக்கட்டான தருணத்தில் இதனை எல்லாம் கருத்தில் கொண்டு தான் முடிவு எடுக்க வேண்டும். இந்த நேரத்தில் இது தான் எனது குறிக்கோளாகும். இந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிபோடப்பட்டுள்ளது. அந்த போட்டி இங்கு நடந்து இருந்தால் நாங்கள் வெற்றி பெற்று இருந்து இருக்கலாம். அடுத்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடந்தால் அங்கு செல்வதா? வேண்டாமா? என்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியது வரலாம்.
மீண்டும் எப்போது கிரிக்கெட் போட்டி தொடங்கப் போகிறது. எத்தனை போட்டிகளில் விளையாட போகிறோம் என்பது பெரிய விஷயமல்ல. என்னை பொறுத்தமட்டில் குடும்ப நலனே முதலில் முக்கியம். கொரோனா உயிர் மருத்துவ பாதுகாப்பு வளையத்தில் விளையாடுவதில் நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இதனால் குடும்பத்தை விட்டு நீண்ட நாட்கள் பிரிந்து இருக்க வேண்டியது வரும். எனவே தற்போதைய சூழ்நிலை நீடித்தால் எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை குறித்து (ஓய்வு பெறுவது) மறுபரிசீலனை செய்ய வேண்டியது இருக்கலாம்‘ என்றார்