கிரிக்கெட்

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 5-ந் தேதி தொடக்கம் + "||" + The first Test between England and Pakistan starts on the 5th

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 5-ந் தேதி தொடக்கம்

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 5-ந் தேதி தொடக்கம்
இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 5-ந் தேதி தொடங்க உள்ளது.

* கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஜோஸ்பட்லரை ‘மன்கட்’ முறையில் ‘ரன்அவுட்’ செய்ததால் விமர்சனங்களை சந்தித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடிய இந்திய சுழற்பந்து வீச்சாளரான ஆர்.அஸ்வின் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘பவுலர் பந்தை வீசும் முன்பே எதிர்முனையில் நிற்கும் பேட்ஸ்மேன் கிரீசை விட்டு நகர்ந்து முன்நோக்கி செல்வதை தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் அப்படி செயல்பட்டு எடுக்கும் ரன்னை அனுமதிக்கக்கூடாது. இந்த விஷயத்தில் பேட்ஸ்மேனுக்கு ஒரு விதி, பவுலருக்கு ஒரு விதி என்ற பாரபட்சத்தை களைய வேண்டும்‘ என்று வலியுறுத்தி இருக்கிறார்.

* இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் வருகிற 5-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான 20 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி இறுதி செய்யப்பட்டு நேற்று அறிவிக்கப்பட்டது. அசார் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், முகமது அப்பாஸ், வஹாப் ரியாஸ், யாசிர் ஷா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பால் ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து - பாலாறு போன்று காட்சியளிக்கும் ஆறு!
இங்கிலாந்தில் பால் ஏற்றிவந்த டேங்கர் லாரி ஆற்றுக்குள் கவிழ்ந்ததால் பால் அனைத்தும் ஆற்றில் கலந்தது.
2. இங்கிலாந்து: மருத்துவமனை அருகே துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி
இங்கிலாந்து நாட்டில் மருத்துவமனை அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
3. இங்கிலாந்தில் அனைவருக்கும் வாரத்திற்கு இரண்டு முறை இலவச கொரோனா பரிசோதனைகள்
இங்கிலாந்தில் அனைவருக்கும் வாரத்திற்கு இரண்டு முறை இலவசமாக கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
4. இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தால் விலகல்
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தால் விலகி உள்ளார்.
5. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.