கிரிக்கெட்

500 விக்கெட் வீழ்த்தி ஸ்டூவர்ட், பிராட் சாதனை + "||" + Stuard Broad record of 500 wickets

500 விக்கெட் வீழ்த்தி ஸ்டூவர்ட், பிராட் சாதனை

500 விக்கெட் வீழ்த்தி ஸ்டூவர்ட், பிராட் சாதனை
500 விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் சாதனை படைத்தார்.
மான்செஸ்டர், 

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக மான்செஸ்டரில் நடந்த 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி நாளான நேற்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், கிரேக் பிராத்வெய்ட்டின் (19 ரன்) விக்கெட்டை எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்தினார். இது ஸ்டூவர்ட் பிராட்டின் 500-வது டெஸ்ட் விக்கெட் (140-வது போட்டி) ஆகும். இதன் மூலம் இந்த இலக்கை கடந்த பந்து வீச்சாளர்களின் வரிசையில் 7-வது வீரராக ஸ்டூவர்ட் பிராட் இணைந்துள்ளார். மேலும் இந்த மைல்கல்லை குறைந்த வயதில் எட்டிய 2-வது பவுலர் என்ற பெருமையையும் பெற்றார். பிராட்டின் தற்போதைய வயது 34 ஆண்டு 32 நாட்கள். இலங்கை சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் அவரை விட குறைந்த வயதில் (31 ஆண்டு 334 நாட்கள்) சாதித்த பவுலர் ஆவார்.

டெஸ்ட் போட்டியில் பிராட்டின் பந்து வீச்சில் அதிக முறை வீழ்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரும் (12 முறை), மைக்கேல் கிளார்க்கும் (11 முறை) என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். சாதனை நாயகன் பிராட்டை வெகுவாக பாராட்டியுள்ள சக வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன், அவர் தொடர்ந்து இதே போன்று பந்து வீசினால் தனது விக்கெட் எண்ணிக்கையை கடக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார். டெஸ்ட் வரலாற்றில் 500 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் விவரம் வருமாறு:-