கிரிக்கெட்

டெஸ்டில் 500 விக்கெட் வீழ்த்திய பிராட்டுக்கு யுவராஜ்சிங் பாராட்டு + "||" + Yuvraj Singh praises Brad for taking 500 wickets in Tests

டெஸ்டில் 500 விக்கெட் வீழ்த்திய பிராட்டுக்கு யுவராஜ்சிங் பாராட்டு

டெஸ்டில் 500 விக்கெட் வீழ்த்திய பிராட்டுக்கு யுவராஜ்சிங் பாராட்டு
டெஸ்டில் 500 விக்கெட் வீழ்த்திய பிராட்டுக்கு யுவராஜ்சிங் பாராட்டு தெரிவித்தார்.
புதுடெல்லி, 

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய 7-வது பவுலர் என்ற பெருமையை பெற்ற இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு, இந்திய முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். யுவராஜ்சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஸ்டூவர்ட் பிராட் பற்றி நான் எப்போது எழுதினாலும் நான் அவரது ஒரே ஓவரில் 6 சிக்சர் (2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில்) விளாசிய சாதனையை மக்கள் நினைவூட்டுவார்கள் என்பதை அறிவேன். இப்போது அவர் டெஸ்டில் 500 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதை என்னுடைய ரசிகர்கள் அனைவரும் பாராட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 500 விக்கெட் என்பது சாதாரண விஷயமல்ல. அதற்கு கடின உழைப்பும், அர்ப்பணிப்பும், உறுதிமிக்க போராட்டமும் அவசியம். பிராட், நீங்கள் ஒரு ஜாம்பவான். வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா-இங்கிலாந்து 2-வது டெஸ்ட் போட்டி: சுழற்பந்து வீச்சுக்கு உதவும் ஆடுகளம் தயாரிப்பு?
இந்தியா-இங்கிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் போட்டிக்கான சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் சுழலுக்கு அதிகமாக ஒத்துழைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.
2. ஐ.சி.சி.யின் புதிய நடைமுறையால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2-வது இடத்துக்கு சரிந்தது இந்தியா
ஐ.சி.சி.யின் புதிய நடைமுறையால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி 2-வது இடத்துக்கு சரிந்துள்ளது.