கிரிக்கெட்

இங்கிலாந்து - அயர்லாந்து மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி: இன்று நடக்கிறது + "||" + The first one-day international between England and Ireland: takes place today

இங்கிலாந்து - அயர்லாந்து மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி: இன்று நடக்கிறது

இங்கிலாந்து - அயர்லாந்து மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி: இன்று நடக்கிறது
இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று நடக்கிறது.
சவுதம்டன், 

3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்து கிரிக்கெட் அணி அண்டை நாடான இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இதன்படி இங்கிலாந்து-அயர்லாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி சவுதம்டனில் இன்று (வியாழக்கிழமை) பகல்-இரவு மோதலாக நடக்கிறது. கொரோனா தடுப்பு உயிர் மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளுக்கு மத்தியில் நடக்கும் இந்த போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிய பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஜோஸ் பட்லர், ஜோ ரூட், கிறிஸ் வோக்ஸ் போன்ற முன்னணி வீரர்களுக்கு இங்கிலாந்து அணியில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அனுபவம் இல்லாத வீரர்கள் அதிகம் பேர் இடம் பெற்றுள்ளனர். இருப்பினும் கேப்டன் இயான் மோர்கன், ஜானி பேர்ஸ்டோ, ஜாசன் ராய், மொயீன் அலி, சாம் பில்லிங்ஸ் ஆகியோரின் அதிரடியான பேட்டிங் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

அயர்லாந்து சிறிய அணி என்றாலும் பல பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த வரலாறு உண்டு. கேப்டன் ஆன்ட்ரூ பால்பிர்னி, பால் ஸ்டிர்லிங், வில்லியம் போர்ட்டர்பீல்டு, கெவின் ஓ பிரையன் உள்ளிட்டோர் திறமையான வீரர்கள். அதனால் இங்கிலாந்து வீரர்கள் எச்சரிக்கையுடன் ஆடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இவ்விரு அணிகளும் இதுவரை 10 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 8-ல் இங்கிலாந்தும், ஒன்றில் அயர்லாந்தும் வெற்றி கண்டுள்ளது. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை.

2023-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்குரிய தகுதி சுற்றான சூப்பர் லீக் இந்த தொடரில் இருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அந்த வகையில் இந்த தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதன்படி வெற்றிக்கு 10 புள்ளிகளும், டை அல்லது முடிவு இல்லாமல் போனால் தலா 5 புள்ளிகளும் வழங்கப்பட்டு சூப்பர் லீக் புள்ளி பட்டியலில் சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. மற்ற இரு ஆட்டங்களும் இதே மைதானத்தில் வருகிற 1 மற்றும் 4-ந்தேதிகளில் நடக்கின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்துக்கு எதிரான தொடரை பாகிஸ்தான் அணி வெல்லும் ; இன்ஜமாம் நம்பிக்கை
இங்கிலாந்தை விட பாகிஸ்தான் அணி சிறப்பானது என்று நான் நினைக்கிறேன் என இன் ஜமாம் தெரிவித்துள்ளார்.
2. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டின் தோல்விக்கு அசார் அலியின் மோசமான கேப்டன்ஷிப்பே காரணம் - வாசிம் அக்ரம்
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டின் தோல்விக்கு அசார் அலியின் மோசமான கேப்டன்ஷிப்பே காரணம் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
3. இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 5-ந் தேதி தொடக்கம்
இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 5-ந் தேதி தொடங்க உள்ளது.
4. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.
5. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 318 ரன்களுக்கு ஆட்டம் இழந்து 114 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.