கிரிக்கெட்

மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது: தந்தை ஆனார், ஹர்திக் பாண்ட்யா + "||" + Wife gives birth to baby boy: Became father, Hardik Pandya

மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது: தந்தை ஆனார், ஹர்திக் பாண்ட்யா

மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது: தந்தை ஆனார், ஹர்திக் பாண்ட்யா
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
வதோதரா,

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, இந்தி நடிகையும், மாடல் அழகியுமான நடாசா ஸ்டான்கோவிச்சை காதலித்து கரம் பிடித்தார். செர்பியா நாட்டைச் சேர்ந்த நடாசா, நடிக்க ஆசைப்பட்டு இந்தியாவுக்கு வந்தவர் ஆவார். இந்த ஊரடங்கு காலத்தில் இருவரும் அவ்வப்போது தங்களது நெருக்கமான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தனர். இதற்கிடையே நடாசா கர்ப்பமடைந்தார். அந்த மகிழ்ச்சியையும் ரசிகர்களுடன் பாண்ட்யா பகிர்ந்து கொண்டார்.

இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நடாசாவை குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை நேற்று பிறந்தது. தந்தையான சந்தோஷத்தில் உள்ள பாண்ட்யா, குழந்தையின் கையை பிடித்தபடி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவருக்கு சக கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், யுஸ்வேந்திர சாஹல் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ‘பாண்ட்யா தம்பதிக்கு வாழ்த்துகள். ஜூனியர் பாண்ட்யாவை வரவேற்கிறோம்’ என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வாழ்த்து செய்தி பதிவிடப்பட்டுள்ளது.