கிரிக்கெட்

சிறந்த கேப்டன் டோனியா? பாண்டிங்கா? அப்ரிடி பதில் + "||" + Best Captain dhoni? Ponting? Afridi replied

சிறந்த கேப்டன் டோனியா? பாண்டிங்கா? அப்ரிடி பதில்

சிறந்த கேப்டன் டோனியா? பாண்டிங்கா? அப்ரிடி பதில்
சிறந்த கேப்டன் டோனியா? பாண்டிங்கா? என அப்ரிடி பதில் அளித்து உள்ளார்.
லாகூர்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி, ‘டுவிட்டர்’ மூலம் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு 2 மணி நேரம் பதில் அளித்தார். அவற்றில் முக்கியமான அம்சம் வருமாறு:-

கேள்வி: உங்களை பொறுத்தவரை சிறந்த கேப்டன் டோனியா (இந்தியா) அல்லது ரிக்கிபாண்டிங்கா (ஆஸ்திரேலியா)?

பதில்: கேப்டன்ஷிப்பில் பாண்டிங்கை விட டோனி சற்று உயர்ந்தவர் என்று மதிப்பிடுகிறேன். ஏனெனில் டோனி இளம் வீரர்களை கொண்ட புதிய அணியை சிறந்த முறையில் உருவாக்கியவர்.

கேள்வி: தற்போது உலகின் சிறந்த பந்து வீச்சாளர் யார்?

பதில்: ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ்.

கேள்வி: பிடித்தமான பேட்ஸ்மேன்?

பதில்: வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ்.

கேள்வி: இந்திய அணியில் உங்களை கவர்ந்த பேட்ஸ்மேன்?

பதில்: விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா.

கேள்வி: உங்களது வயது என்ன?

பதில்: வயது என்பது வெறும் நம்பர் மட்டுமே...

இவ்வாறு அப்ரிடி கூறினார்.