கிரிக்கெட்

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் நவம்பர் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற வாய்ப்பு: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் + "||" + TNPL cricket series likely to be held in November or March next year: Tamil Nadu Cricket Association

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் நவம்பர் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற வாய்ப்பு: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் நவம்பர் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற வாய்ப்பு: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் நவம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னை,

 5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஜூன் 10-ந் தேதி முதல் ஜூலை 12-ந் தேதி வரை சேலம், கோவை, நத்தம், நெல்லை ஆகிய இடங்களில் நடக்க இருந்தது. கொரோனா அச்சத்தால் இந்த போட்டி மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்படுவதாக கடந்த மே மாதம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்தது.

தள்ளிவைக்கப்பட்ட டி.என்.பி.எல். போட்டியை ஆகஸ்டு, செப்டம்பர் மாதத்தில் நடத்தலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆலோசித்து வந்தது. ஆனால் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தற்போது அதிகமாக இருப்பதால் இந்த மாதத்தில் போட்டியை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவுமில்லை.

இந்த நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி இது குறித்து கூறியதாவது: டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரை தற்போது நடத்துவது சாத்தியமில்லை. கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம். நவம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் டி.என்.பி.எல் கிரிக்கெட் நடைபெற வாய்ப்புள்ளது” என்றார்.