கிரிக்கெட்

இலங்கை பிரீமியர் லீக் போட்டி; இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் விளையாட முடிவு + "||" + Sri Lanka Premier League match; Former India captain Irfan Pathan has decided to play

இலங்கை பிரீமியர் லீக் போட்டி; இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் விளையாட முடிவு

இலங்கை பிரீமியர் லீக் போட்டி; இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் விளையாட முடிவு
இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் இலங்கை பிரீமியர் லீக் போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளார்.
கொழும்பு,
 
இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் முதலாவது லங்கா பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் செப்டம்பர் 20-ந் தேதி வரை அந்த நாட்டில் நடக்க இருக்கிறது. இதில் கொழும்பு, கண்டி, காலே, டம்புல்லா, ஜாப்னா ஆகிய நகரங்களை தலைமையிடமாக கொண்ட 5 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த அணிகளில் இலங்கையை சேர்ந்த முன்னணி வீரர்களுடன், வெளிநாட்டு வீரர்களும் இடம் பெறுகிறார்கள்.

கடந்த ஜனவரி மாதத்தில் கிரிக்கெட் போட்டியில் இருந்து விடைபெற்ற இந்திய முன்னாள் ‘ஆல்-ரவுண்டர்’ இர்பான் பதான், நியூசிலாந்து அதிரடி ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் உள்பட 70 வெளிநாட்டு வீரர்கள் லங்கா பிரீமியர் லீக்கில் விளையாட விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.